வைரல்

இயற்கைக்கும் மனிதனுக்கும்.. 'விட்ட குறை, தொட்ட குறை என்ன?

இயற்கைக்குள் தன்னை அமிழ்த்துக் கொள்ள மனிதன் விரும்புவது மனித குலத்தின் ஆதி ஆசை.

இயற்கைக்கும் மனிதனுக்கும்..  'விட்ட குறை, தொட்ட குறை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

தனியாக எவ்வளவு சுற்றினாலும் சக உயிரின் உயிர் வெப்பமே பாதுகாப்பு, நம்பிக்கை, வாழ்க்கை எல்லாம்.

'மலையளவு நேசிக்கிறேன். கடலளவு வெறுக்கிறேன்' என்கிற இரண்டுமற்ற நிலைதான் மனிதனுக்கு. அத்தகைய குழப்ப நிலை அவனை எப்போதுமே ஒரு தத்தளிப்பில்தான் இருக்கிறது.

குறிப்பாக இயற்கை பிரிவதில் இருந்துதான் மனிதன் உருவாக தொடங்குகிறான். உயிர்களுக்கு இயற்கையாக இருக்கும் instinct எனப்படும் உள்ளுணர்வு மனிதனுக்கு குறைவு. இயற்கையில் பிற உயிர்களுக்கு இருக்கும் உள்ளுணர்வை மனிதன் செயற்கையாக உருவாக்கி சமூக உணர்வு என ஆக்கி வைத்திருக்கிறான். இயற்கையை பிரிவதில் உருவாகும் அநாதரவுத்தன்மைதான் மீண்டும் அவனை இயற்கை நோக்கி ஓட வைக்கிறது.

இயற்கைக்கும் மனிதனுக்கும்..  'விட்ட குறை, தொட்ட குறை என்ன?

இயற்கைக்கும் சமூகத்துக்கும் இடையிலான இந்த 'விட்ட குறை, தொட்ட குறை' ஓட்டத்தைதான் பயணம் என்கிறோம்.

இத்தகைய பயணங்கள் மனம் கொள்ளும் பதற்றத்தை பூர்த்தி செய்யாது என்பார் ஓஷோ. புறநிலை பயணத்தை விட அகநிலை பயணமே முக்கியம் என்பார்.

அகநிலை பயணத்துக்கு இலக்கு இருக்கக் கூடாது. மனித மனம் எண்ணங்களின் வழியாக இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கும். எனவேதான் அவர் 'மனமற்ற தன்மை' என்பதை யோசனையாக கூறுவார்.

மனமற்ற தன்மை குறித்து விளக்குகையில் ஓஷோ இப்படி சொல்கிறார்:

“I am dealing with the contemporary man, who is the most restless being that has ever evolved on the earth”

இயற்கைக்கும் மனிதனுக்கும்..  'விட்ட குறை, தொட்ட குறை என்ன?

மனித வரலாற்றிலேயே அமைதியற்ற வாழ்க்கையை வாழ்வது இன்றைய மனிதன்தான்.

ஆப்பிரிக்காவிலிருந்து வெளியெறிய மனிதன், அரண்மனையிலிருந்து கிளம்பிய புத்தன், வீட்டிலிருந்து கிளம்பிய இயேசு, நாட்டிலிருந்து கிளம்பிய சே குவேரா, எந்த நாடுமின்றி அலையவிடப்பட்ட மார்க்ஸ், கடல்கள் தாண்டி அலைய விடப்படும் அகதிகள் வரை பயணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை எல்லாமும் நேர்ந்ததற்கு அடிப்படையாக பல புறநிலை காரணிகள் இருக்கலாம். அகநிலையில் ஒற்றை காரணம் மட்டுமே இருக்கிறது.

வாழ்தலுக்கான யத்தனிப்பு!

சே குவேரா என்றதுமே நமக்கு ஒரு புல்லட்டும் சுருட்டும் கஞ்சாவும் தான்தோன்றித்தனமான பயணமும்தான் தோன்றுகிறது எனில், அது நம்முடைய புரிதலில் உள்ள கோளாறு. ஏனெனில் சே குவேரா அவை அல்ல!

பயணத்தை பற்றி சொல்கையில் ஓஷோ இப்படி சொல்கிறார்:

“Just go inwards and it is not thousands of miles away. It is only thousands of thoughts away."

இயற்கைக்கும் மனிதனுக்கும்..  'விட்ட குறை, தொட்ட குறை என்ன?

மனிதர்களும் சமூகமுமே பிரச்சினை என இயற்கைக்குள் ஓடி அமிழ்ந்து கொள்வதில் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். அது கொடுக்கும் அகநிலை நெருக்கடியும் கேட்டேனும் அறிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க வாழ்க்கை கொடுத்த அவநம்பிக்கையும் வியட்நாம் போர் மீது இருந்த வெறுப்பும் ஒரு தலைமுறையை ஹிப்பிகளாக்கியது. அமெரிக்க வாழ்க்கைக்கு எதிரானது கம்யூனிசம் என்ற நுனிபுல் புரிதலை மட்டும் கொண்டு சமூக மாற்றத்தை நிர்பந்திக்காமல் நாடு நாடாக அலைந்தனர். கம்யூன் வாழ்க்கை வாழ்ந்தனர். கஞ்சா குடித்தனர். இசை பாடினர். வரம்பற்ற கலவி புரிந்தனர். இறுதியில் அவர்கள் பயந்த வெறுமைக்குள் வீழ்ந்து தொலைந்து போயினர்.

மேற்கூறிய ஓஷோ ரஜ்னீஷே ஹிப்பி வாழ்க்கைக்குள் பலரை ஆழ்த்தி 'ரஜ்னீஷ்புரம்' என அமெரிக்காவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து காணாமல் போனதும் நடந்தது.

மேலும் மேலும் தனியாகுதல் இன்று மிக முக்கியமான விஷயமாக போதிக்கப்படுவதன் காரணத்தை புரிந்து கொள்ளாமல் நம் பயணங்கள் முழுமையடைய முடியாது.

இயற்கைக்கும் மனிதனுக்கும்..  'விட்ட குறை, தொட்ட குறை என்ன?

ஏதோவொரு வகை பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டுதான் நம் பயணங்கள் நிகழ்கின்றன. அவை இயற்கையை நோக்கிய பயணங்கள் இல்லை. நம்முடைய விலங்கு பூட்டிய செயற்கை வாழ்க்கைகளுக்குள் திரும்பி வந்துவிடுவதற்கான இளைப்பாறல் மட்டுமே.

காடழிதலை பொருட்படுத்தாமல் ஆறுகள் உறிஞ்சப்படுவதை கண்டுகொள்ளாமல் இயற்கையுடன் வாழும் கூட்டம் ஒடுக்கப்படுவதை எதிர்க்காமல் நாம் பயணிப்பது எல்லாம் இயற்கை நேயமே அல்ல.

இயற்கையை சுரண்டும் மனிதனை குறிப்பிடுகையில் எங்கெல்ஸ் இப்படி குறிப்பிட்டார்:

'Let us not . . . flatter ourselves overmuch on account of our human victories over nature. For each such victory nature takes its revenge on us. Each victory, it is true, in the first place brings about the results we expected, but in the second and third places it has quite different, unforeseen effects which only too often cancel the first. . . .'

இயற்கைக்குள் தன்னை அமிழ்த்துக் கொள்ள மனிதன் விரும்புவது மனித குலத்தின் ஆதி ஆசை. இயற்கையை கைவிட்ட குற்றவுணர்ச்சி. அதை தனியாக சரி செய்ய முயலுவது சுயநலம் மட்டுமே. மெய்யான தீர்வை மனதுக்குள் இறங்கி பரிணாமத்துக்குள் தேடி சமூகத்தில் நிகழ்த்தி சக உயிரின் வெப்பத்தில்தான் அடைய வேண்டும்; அடைய முடியும்!

banner

Related Stories

Related Stories