வைரல்

“இதுக்குலாம் என் அம்மாதான் சரி..” : சம்பள பேரம் குறித்து அமேசான் ஊழியர் போட்ட பதிவு வைரல்..

"சம்பள பேரம் குறித்து என் அம்மா நல்லா டீல் பண்ணுவாங்க" என்று அமேசான் ஊழியர் ஒருவர் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

“இதுக்குலாம் என் அம்மாதான் சரி..” : சம்பள பேரம் குறித்து அமேசான் ஊழியர் போட்ட பதிவு வைரல்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் எந்த பொருட்கள் வங்கினாலும் பேரம் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக அம்மாமார்கள், பேரம் பேசுவதில் கில்லாடிகள். நாமும் எதாவது ஒரு கடைக்கு போகும்போது, நமது அம்மாவை கூப்பிட்டு போனால், ரூ.100 க்கு விற்க கூடிய பொருளை ரூ.10க்கு வாங்கி வரும் அளவுக்கு அவர்களுக்கு திறமை உள்ளது.

இப்படி இருக்க, என்றாவது நாம் வேலை பார்க்கும் இடத்தில் சம்பளம் குறித்து பேசுகையில், பேரம் பேசுவதற்கு அம்மாவை கூப்பிட்டு போனால் எப்படி இருக்கும் என்று எண்ணியிருக்கிறோமா? அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

“இதுக்குலாம் என் அம்மாதான் சரி..” : சம்பள பேரம் குறித்து அமேசான் ஊழியர் போட்ட பதிவு வைரல்..

சமூக வலைதள பக்கமான, linkedin என்ற இணையத்தில், நிதேஷ் என்ற நபர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சம்பள பேச்சுவார்த்தைக்கு எனது அம்மாவை அழைத்து வரட்டுமா?.. இந்த மாதிரி விவகாரத்திற்கு எல்லாம் அவங்க நல்லா டீல் பண்ணுவாங்க.." என்று பதிவிட்டிருந்தார். மேலும் #underated_skill_in_tech என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவு linkedin இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

நிதேஷ் , தற்போது லண்டனில் உள்ள அமேசான் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியியலாளராக (software development engineering) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories