வைரல்

முறத்தால் புலியை விரட்டுவது போல முதலையை விரட்டிய முதியவர்.. இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!

தாக்க வந்த முதலையை முதியவர் ஒருவர் சமையல் பாத்திரத்தை கொண்டு அடித்து விரட்டும் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

முறத்தால் புலியை விரட்டுவது போல முதலையை விரட்டிய முதியவர்.. இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சங்க இலக்கியங்களில் தமிழ் பெண்கள் புலியை முறத்தால் அடித்தே விரட்டினார்கள் என்று கூறப்பட்டிருக்கும். அதேபோன்ற ஒரு நிலை தற்போது நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை செய்தவர் புலிக்கு பதிலாகி முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டியியுள்ளார்.

முறத்தால் புலியை விரட்டுவது போல முதலையை விரட்டிய முதியவர்.. இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!

ஆஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள டார்வின் பகுதியில் கை ஹன்சன் என்ற முதியவர் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது அவரின் விடுதி அருகே அந்த பகுதியில் இருந்த முதலை ஒன்று வந்துள்ளத. மேலும் அந்த முதலை அந்த முதியவரை தாக்கவும் முயன்றுள்ளது.

உடனே சுதாரித்த அந்த முதியவர் தான் வைத்திருந்த சமையல் பாத்திரத்தால் அந்த முதலையை அடித்துள்ளார். இதன் பின்னர் அடி வாங்கிய முதலை காட்டு பகுதிக்கு சென்று மறைந்துள்ளது.

இந்த சம்பவத்தை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், இதை பகிர்ந்த இணையவாசிகள் அந்த முதியவரின் துணிச்சலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories