வைரல்

“நினைத்த வாழ்க்கையில் இப்போது இருந்தால் எப்படி இருக்கும்?” : ‘குவாண்டம்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

காலத்தைக் குவாண்டத்துடன் யோசிக்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் வாழ்க்கையைக் குவாண்டமாக அணுகும்போது கிடைக்குமா என்பது விடையில்லா கேள்வி.

“நினைத்த வாழ்க்கையில் இப்போது இருந்தால் எப்படி இருக்கும்?” : ‘குவாண்டம்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

அறிவியலை வாழ்க்கைக்குள் எப்படி கொண்டு வருவது?

பகுத்தறிவு, கேள்வி முதலிய விஷயங்களால் ஓரளவுக்கு நம் வாழ்க்கை அறிவியல்தன்மை பெறச் செய்கிறோம். ஆனால் அறிவியல் பெருங்கடல். அதன் முக்கியமான கண்டுபிடிப்புகளை வாழ்க்கைக்குள் புகுத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி முதலில் புகுத்த முடியுமா?

இன்றைய அறிவியலின் பெரும் கண்டுபிடிப்பு குவாண்டம் அறிவியல். குவாண்டம் என்றால் அளவிடக்கூடிய சிறுபகுதி. அதாவது ஒளியைப் பாய்ச்சினால் அது ஒரு கற்றையாக பாய்வதைப் பார்க்கிறோம்.

ஒளியின் உள்ளே என்ன இருக்கும்? துகள்கள் இருக்கலாம் என நினைக்கிறோம். இன்னும் ஒளியை நுணுக்கி ‘குவாண்டம்’ அளவில் பார்த்தால் வேறொரு விஷயம் தெரிகிறது என்கிறது அறிவியல். ஒளி ஒரே நேரத்தில் துகளாகவும் அலையாகவும் வெளிப்படுகிறதாம். ஆகவே நுண்ணிய அளவில் உலகின் எல்லாமும் இரு நிலைகளில் இயங்கும் வாய்ப்பு இருக்கிறதென குவாண்டம் அறிவியல் குறிப்பிடுகிறது.

“நினைத்த வாழ்க்கையில் இப்போது இருந்தால் எப்படி இருக்கும்?” : ‘குவாண்டம்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

துகளாக இருக்கும் ஒளி நாமறியாது ஒரு கட்டத்தில் அலையாக மாறுவதைப் போல், நம் வாழ்க்கையில் நேரும் விஷயங்களை நாமறிந்திராத ஒரு வாழ்க்கைக்கு மாற்ற முயன்றால் எப்படி இருக்கும்?

காலத்தைக் குவாண்டத்துடன் யோசிக்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் வாழ்க்கையைக் குவாண்டமாக அணுகும்போது கிடைக்குமா என்பது விடையில்லா கேள்வி.

எப்போதும் எல்லாவித நிகழ்வுகளும் நடப்பதற்கான சாத்தியங்கள் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டே இருப்பதாக அறிவியல் சொல்கையில் வாழ்க்கையென இறுக்கி நாம் பிடித்திருக்கும் விஷயம் பல துகள்களாக சிதறுகிறது.

காலை எழுந்து வேலைக்கு ஓடி அலுப்பாக வாழும் வாழ்க்கைக்குள் குவாண்டம் எப்படி இருக்கும்? நமக்கான நிகழ்வுகளை முன்னுணர்ந்து அதை மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்?

ஆங்கிலப்படக் கதை போல் தெரியலாம். ஆனால் நாம் அனுதினமும் செய்யும் ஒவ்வொரு விஷயமும் முடிவிலா ஒரு நிகழ்வுச் சங்கிலியை உருவாக்குகிறது. வீட்டில் இல்லாமல் கடையில் பார்சல் வாங்கி உண்ணவென முடிவெடுத்தால் அலைபேசி செயலி தொடங்கி, உணவு கொண்டு வருபவர், ரெஸ்டாரண்ட்டில் சமைப்பவர், பொட்டலம் கட்டுபவர், பொட்டலத்துக்கான காகிதம் உற்பத்தியான மரம், அது செய்தித்தாளாக இருக்கும் பட்சத்தில் அந்தச் செய்தி நிறுவனப் பணியாளர், காகிதத்தில் இருக்கும் செய்தியின் செய்தியாளர், அந்தச் செய்தியில் கொல்லப்பட்டவர், கொன்றவர், அவருடைய வாழ்க்கை, வக்கீல், நீதிபதி, போலீஸ் என பெரும் தொடர் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தொடரில் சம்பந்தப்பட்ட எவருமே தெரிந்து இந்த நிகழ்வுச் சங்கிலிக்குள் வந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை தெரிந்து வந்திருந்தால்?

“நினைத்த வாழ்க்கையில் இப்போது இருந்தால் எப்படி இருக்கும்?” : ‘குவாண்டம்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

அதுதான் குவாண்டம்!

வாழ்க்கையில் ஒரு கட்டம் வரும். அந்தக் கட்டம் உங்களிடம் ஒரு முடிவைக் கோரும். அங்கு இரண்டு வழிகள்தான் உங்களுக்கு தெரியும். வழக்கமான முடிவுடன் உங்களுக்கு பரிச்சயப்பட்ட வழக்கமான வாழ்க்கை ஒரு வழி.

பரிச்சயப்படாத சவால் மிகுந்த ஆனால் வழக்கத்தைத் தாண்டிய வாழ்க்கையுடன் இன்னொரு வழி. தேவை என்னவெனில் நீங்கள் அச்சமயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதற்கு எப்போதும் நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் எது வழக்கம், எது வழக்கமில்லை என்பதை நீங்கள் புரிந்திருக்க முடியும். அப்படி நீங்கள் விழிப்புப் பெற வாழ்க்கை உங்களுக்கு ஒரு கடுமையான அடி கொடுக்கும்.

“நினைத்த வாழ்க்கையில் இப்போது இருந்தால் எப்படி இருக்கும்?” : ‘குவாண்டம்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

அடுத்து தொடரவிருக்கும் நிகழ்வுச் சங்கிலி அல்லது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். பெரிய ரகசியமாக ஒன்றும் இருக்காது. அதைத் தொடரப் போகிறோமா அல்லது வேறொன்றைத் தொடங்கப் போகிறோமா என்பதுதான் நாம் தெரிய மறுக்கும் ரகசியம். அது புரிந்து விட்டால் அடுத்துக் காத்திருப்பது குவாண்டம் வாழ்க்கைதான்.

சற்று யோசித்துப் பாருங்கள். பள்ளியில் நினைத்த வாழ்க்கையில் நீங்கள் இப்போது இருக்கிறீர்களா? கடந்த வருடம் நினைத்த வாழ்க்கையில் நீங்கள் இப்போது இருக்கிறீர்களோ? யாராரோ உங்களின் வாழ்க்கைகளில் வந்து உங்களின் வாழ்க்கைகளை மாற்றி விட்டிருப்பார்கள்.

நீங்களும் அந்த மாற்றங்களுக்கேற்ப உங்களின் வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருப்பீர்கள். ஆனால் ஒருமுறை, ஒரே ஒருமுறை, பிறரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் உருவாக்கி, வழக்கமான பாதையிலிருந்து நீங்கள் விலக முடிந்தால்?

நீங்கள் துகளிளிருந்து அலையாகிறீர்கள் என அர்த்தம்!

banner

Related Stories

Related Stories