வைரல்

ஆர்டர் செய்ததோ ஆனியன் ரிங்ஸ்.. வந்ததோ.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் செய்தது என்ன தெரியுமா?

ஆர்டர் செய்த ஆனியன் ரிங்ஸ்க்கு பதில் வெறும் வெங்காயம் வந்துள்ளதைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆர்டர் செய்ததோ ஆனியன் ரிங்ஸ்.. வந்ததோ.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் செய்தது என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரியில் ஆர்டர் செய்யும் உணவுகள் மாறி வருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ஒருவருக்குப் புதுவிதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் உபைத். இளைஞரான இவர் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, டெலிவரி ஆன உணவை பார்சலை பிரித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்.

இவர் ஆர்டர் செய்த ஆனியன் ரிங்ஸ்க்கு பதிலாக, வெறும் வெட்டப்பட்ட வெங்காயம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து டெலிவரி செய்த உணவகத்தைக் கண்டிக்கும் விதமா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்டர் செய்ததோ ஆனியன் ரிங்ஸ்.. வந்ததோ.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் செய்தது என்ன தெரியுமா?

அந்த வீடியோவில், டெலிவரியான வெங்காயத் துண்டுகளை விரல்களில் ரிங்காக மாட்டிக் கொண்டு போஸ்கொடுத்துள்ளார். இதையடுத்து இவரின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக தங்களின் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சம்பவந்தப்பட்ட உணவங்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories