வைரல்

‘360 டிகிரி எதிரி : இதுகூட எப்படி IPS ஆனார்?’ - அண்ணாமலை பேச்சால் அப்செட் ஆன பா.ஜ.க தொண்டர்கள்!

அண்ணாமலையில் இந்த பேச்சைத் தான், நெட்டிசன்கள் பாரபட்சம் பார்க்காமல் விமர்ச்சித்து வருகின்றனர்.

‘360 டிகிரி எதிரி : இதுகூட எப்படி IPS ஆனார்?’ - அண்ணாமலை பேச்சால் அப்செட் ஆன பா.ஜ.க தொண்டர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி நேற்று, (26.5.2022 வியாழக்கிழமை) ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றிய மற்றும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டின் நலனுக்காக மிகமுக்கியமான 5 கோரிக்கைகளை மேடையிலேயே முன்வைத்தார். அதுமட்டுமல்லாது, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு முக்கியத்துவமாக உள்ளது போன்ற விரங்களை புள்ளிவிவரத்தோடு அடுக்கி பேசினார்.

மேலும் ‘’உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!“ We will extend a hand of friendship at the same time, we will raise our our voice for our rights.” என்பதையும் குறிப்பிட்டார். முதலமைச்சரின் இத்தகைய பேச்சு அனைத்துத் தரப்பு மக்களிடையே பெரும் பாராட்டுக்களை பெற்று, சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகிறது.

‘360 டிகிரி எதிரி : இதுகூட எப்படி IPS ஆனார்?’ - அண்ணாமலை பேச்சால் அப்செட் ஆன பா.ஜ.க தொண்டர்கள்!

வழக்கம் போல குறை கண்டுபிடித்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பா.ஜ.கவினர் முதலமைச்சர், பிரதமரிம் பேசியது தவறானது என அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அதில் ஒருபடி மேலேச் சென்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, விமர்சனம் செய்வதாகக் கூறி, வீண் விளம்பரம் தேடிக்கொள்ள பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளானது.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த அரசு விழாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயரதிகாரிகள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர். இதுபலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பா.ஜ.க தலைவர், முதலமைச்சர் மீது அவதூறை வீசியுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ”பிரதமர் மேடையில் இருக்கும் போதே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்துள்ளார் என்றும் முதலமைச்சரின் பேச்சு வெட்கப்பட வைத்தது” என்றும் பேசியுள்ளார்.

‘360 டிகிரி எதிரி : இதுகூட எப்படி IPS ஆனார்?’ - அண்ணாமலை பேச்சால் அப்செட் ஆன பா.ஜ.க தொண்டர்கள்!

அண்ணாமலை பேசியபோது, முதலமைச்சரும், நாங்களும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள். ஆனால் முதலமைச்சருக்கு உண்டான மரியாதையைக் கொடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சைத் தான், நெட்டிசன்கள் விமர்ச்சித்து வருகின்றனர். அதாவது, 360 டிகிரி எதிராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார் அண்ணாமலை. ஆனால், பாகைமானியில் 0 டிகிரி என்பதும், 360 டிகிரியும் ஒரே கோணத்தை குறிப்பவை என்பது பள்ளிக்கூட சிறுவர்களுக்கு கூட தெரியும். ஆனால், இந்த சாதாரண கணக்குக்கூட தெரியாத அண்ணாமலை எப்படி IPS தேர்வானார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக, பா.ஜ.க அண்ணாமலைக்கு தி.மு.க ஐ.டி விங் செயலாளர் டி.ஆர்.பி ராஜா பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”அது எப்படி மேன் 360 டிகிரி ஆகும்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஜியோமெட்ரி தெரியாமல் ஐ.பி.எஸ் ஆனது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பலரும் ஆங்கிலம் தெரியாமல் கூட இருக்கலாம், கணக்குத் தெரியாமல் இருக்கலாமா என விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், பா.ஜ.க தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories