வைரல்

15 நிமிடத்தில் லட்சாதிபதி ஆகனுமா? - வைரலாகும் டெல்லி ஹோட்டலின் மோமோ சேலஞ்ச்..!

15 நிமிடத்தில் லட்சாதிபதி ஆகனுமா? - வைரலாகும் டெல்லி ஹோட்டலின் மோமோ சேலஞ்ச்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் உணவகங்கள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ள உணவு பிரியர்களை குறி வைத்து அவ்வப்போது உணவு சேலஞ்ச் அறிவிப்பது அண்மைக்காலமாக தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள Big Momos world என்ற உணவகம் அறிவித்திருக்கும் ஃபுட் சேலஞ்ச்தான் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

பதினைந்து நிமிடத்தில் முப்பத்தி ஐந்து மோமோஸ்களை எந்த இடையூறும் இல்லாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் நிபந்தனையாக போட்டில் பங்கேற்போர் முன்பே அந்த 35 மோமோஸ்களுக்கான கட்டணத்தை கட்டிவிட வேண்டும், போட்டியில் வென்றவர்கள் மீண்டும் பங்கேற்க கூடாது என கூறியிருக்கிறது.

இந்த போட்டி குறித்து கேள்விபட்ட ஃபுட்டி யூடியூபரான விஷால் என்பவர் மோமோ சேலஞ்சில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இருப்பினும் தான் வென்ற அந்த 1 லட்ச ரூபாயில் பாதியை உணவகத்திடமே திருப்பி கொடுத்த விஷால் எஞ்சிய பணத்தை பணியாளர் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவை விஷால் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியிருக்கிறார். இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேலானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories