வைரல்

“எங்க கூட வாழ்ந்த நாலு கால் தேவதை அது” : வளர்ப்பு நாய்க்கு கல்லறை கட்டிய தம்பதியர் - நெகிழ்ச்சி சம்பவம்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் 13 ஆண்டுகளாக பாசத்துடன் வளர்த்து வந்த நாய் இறந்ததால் தனது தோட்டத்தில் கல்லறை கட்டி தம்பதியர் வழிபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எங்க கூட வாழ்ந்த நாலு கால் தேவதை அது” : வளர்ப்பு நாய்க்கு கல்லறை கட்டிய தம்பதியர் - நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஆறுமுக நயினார் பாக்கியலட்சுமி. ஆறுமுக நயினார் லாரி டிரைவராக பணிபுரிகிறார். இவர்கள் பொம்மி என்ற நாயை மிகவும் பாசத்துடன் 13 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளனர்.

ஆறுமுக நயினார் கடைதெருவுக்கு தனது பைக்கில் செல்லும்போதும் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு செல்லும்போதும் கூடவே பொம்மி நாயை அழைத்துச் செல்லுவார். மேலும் குடும்பத்தில் ஒருவராக தனது குழந்தையைப் போல பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.

மேலும் தெருவில் உள்ளவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகி உள்ளது பொம்மி நாய். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பொம்மி இறந்துள்ளது. இதனால் மிகவும் சோகத்துடன் காணப்பட்ட ஆறுமுக நயினார் தம்பதியினர் தங்களது சொந்த தோட்டத்தில் குழி தோண்டி பொம்மியை அடக்கம் செய்துள்ளனர்.

தான் பாசமாக வளர்த்த நாய் மரித்துப் போனதை அடுத்து மனிதர்களுக்கு இணையாக அடக்கம் செய்து கல்லறை கட்டியது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories