வைரல்

2 கால்கள்.. 2 தலைகள் : உடல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு அரசுப் பணி வழங்கிய பஞ்சாப் அரசு!

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு மின்வாரியத்தில் பஞ்சாப் அரசு பணி வழங்கியது அனைவரையும் நெகிழச்சியடைய வைத்துள்ளது.

2 கால்கள்.. 2 தலைகள் : உடல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு அரசுப் பணி வழங்கிய பஞ்சாப் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள் சோஹ்னா மற்றும் மோஹ்னா. உடல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான இவர்களுக்கு மின்வாரியத்தில் பஞ்சாப் அரசு பணி வழங்கியுள்ளது அனைவரையும் நெகிழச்சியடைய வைத்துள்ளது.

டெல்லியில் 2003ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி இவர்கள் பிறந்துள்ளனர். இவர்கள் இரண்டு இதயங்கள், கைகள், சிறுநீரகங்கள் மற்றும் முதுகுத் தண்டுகளுடன், கல்லீரல், பித்தப்பை, கால்கள் இருவருக்கும் சேர்ந்தபடியே பிறந்துள்ளனர்.

அதாவது, சாதாரண மனிதர்களை போன்று இரண்டு கால்கள் இருக்கும். ஆனால் இடுப்பிற்கு மேல் இரண்டு உடல்கள் இருந்தன. இதனால், அறுவை சிகிச்சை செய்து இருவரையும் பிரித்துவிடலாம் என மருத்துவர்கள் முதலில் நினைத்துள்ளனர். இப்படி செய்தால் ஒருவர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவை மருத்துவர்கள் கைவிட்டுள்ளனர்.

உடல் ஒட்டி குழந்தைகள் பிறந்ததால், அவர்களை அவரது பெற்றோர்கள் கைவிட்டுவிட்டனர். இதையடுத்து இவர்களைத் தொண்டு நிறுவனம் எடுத்து வளர்த்து வந்தது. இங்கு தங்கிக்கொண்டே பல்வேறு தடைகளையும் தாண்டி இருவரும் டிப்ளமோ வரை படித்துள்ளனர். இவர்களின் இந்த மன உறுதிக்காக பஞ்சாப் அரசு மின்வாரியத்தில் இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பணி வழங்கியுள்ளது.

இதுகுறித்து 19 வயதாகும் சோஹ்னா மற்றும் மோஹ்னா கூறுகையில், "எங்களுக்கு இந்த வேலை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மின்வாரிய பணியில் டிசம்பர் 20ஆம் தேதி சேர்ந்தோம். இந்த வேலை கிடைக்க உதவியாக இருந்த பஞ்சாப் அரசுக்கும், எங்களை வளர்த்தெடுத்த பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories