வைரல்

ViralVideo எலன் மஸ்கின் உருவ பொம்மையோடு டெஸ்லா கார் வெடி வைத்து எரிப்பு; ஓனர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

டெஸ்லா காரை வெடி வைத்து தகர்த்துள்ள சம்பவம் பின்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது.

ViralVideo எலன் மஸ்கின் உருவ பொம்மையோடு டெஸ்லா கார் வெடி வைத்து எரிப்பு; ஓனர் கூறிய காரணம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மின்சார வாகன புரட்சியின் முன்னணியில் இருப்பது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். ஆனால் அந்த நிறுவனத்தின் காரையே வெடி வைத்து தகர்த்துள்ள சம்பவம் பின்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது.

தெற்கு பின்லாந்தின் ஜாலா பகுதியைச் சேர்ண்டவர் தோமஸ் கடைனென். இவர் 2013ம் ஆண்டு S வகை டெஸ்லா காரை வாங்கியிருக்கிறார். அண்மையில் அவது கார் பழுதான நிலையில் டீலர் வொர்க்‌ஷாப்பில் ரிப்பேர் செய்வதற்காக ஒரு மாதம் விட்டிருக்கிறார்.

ஆனால் காரின் பேட்டரியை மாற்ற 20,000 யூரோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சம் செலவாகும் எனவும் இதற்காக டெஸ்லா நிறுவனத்திடம் அனுமதி கேட்க வேண்டும் எனவும் டீலர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் காரின் வாரன்டி காலம் முடிவடைந்ததால் அவ்வளவு செலவு செய்ய தோமஸ் மறுத்ததால் டீலரிடம் இருந்து ட்ரக்கில் வைத்து காரை கொண்டு வந்திருக்கிறார்.

அதனையடுத்து தனது நண்பர்கள் குழுவின் உதவியோடு ஒரு குவாரியில் வைத்து தனது டெஸ்லா காரை 30 கிலோ வெடி வைத்து தகர்த்திருக்கிறார் தோமஸ்.

இது போக அந்த காரின் டெஸ்லாவின் சி.இ.ஓ. எலன் மஸ்கின் உருவ பொம்மையையும் வைத்து எரிக்கச் செய்திருக்கிறார்கள். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு யூடியூபிலும் பதிவேற்றி இருக்கிறார்கள். அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories