வைரல்

YOUTUBE முகப்பில் காத்திருந்த ஆச்சர்யம்... ஒரு ட்ரில்லியன் பார்வையாளர்களைக் கண்ட சேனலுக்கான கொண்டாட்டம்!

Minecraft என்ற வீடியோ கேம் யூடியூப் சேனல் ஒரு ட்ரில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

YOUTUBE முகப்பில் காத்திருந்த ஆச்சர்யம்... ஒரு ட்ரில்லியன் பார்வையாளர்களைக் கண்ட சேனலுக்கான கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று யூடியூப் பக்கத்தைத் திறந்த உடன் எல்லோருக்கும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. இதற்குக் காரணம் யூடியூப் முகப்பு பக்கத்தில் ஒரு ட்ரில்லியன் பார்வையாளர்களைக் கடந்த யூடியூப் சேனல் என்பதைக் குறிக்கும் விதமாக ஒரு அனிமேஷனுடன் யூடியூப் லோகோ இடம்பெற்றிருந்தது.

இதற்கான காரணத்தை இணையவாசிகள் பலரும் தேடினர். இந்த தேடுதல் வேட்டையில் அவர்களுக்கான விடை கிடைத்தது. Minecraft என்ற யூடியூப் வீடியோ கேம் சேனல் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாகவே கூகுள் டூடுல் போன்று Minecraft சேனலின் ஒரு ட்ரில்லியன் பார்வையாளர்களை கௌரவித்துள்ளது யூடியூப்.

2009ஆம் ஆண்டு ஏழு பேர் கொண்ட குழுவால் Minecraft என்ற யூடியூப் சேனல் துவக்கப்படுகிறது. இதிலிருந்து உலகம் முழுவதும் விளையாடப்படும் வீடியோ கேம்கள் பற்றிய வீடியோக்கள் இந்த சேனலில் இடம்பெற்று வந்தன. உலகம் முழுவதும் வீடியோ கேமிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதனால் Minecraft யூடியூப் சேனல் வெகு விரைவாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

150 நாடுகளிலிருந்து Minecraft வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவதாகவும் அதற்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரியேட்டர் சேனல்கள் இருப்பதாகவும் யூடியூப் கூறியுள்ளது. Minecraft யூடியூப் சேனல் தற்போது ஒரு ட்ரில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இதுவரை இந்த சேனை 8.93 மில்லியன் மக்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories