வைரல்

"பூனைக்குட்டி என நினைத்து புலிக்குட்டியை தூக்கியவர் பதறியடித்து ஓட்டம்” - சாலையில் நடந்தது என்ன?

பூனை என நினைத்து புலிக்குட்டியைத் தூக்கிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"பூனைக்குட்டி என நினைத்து புலிக்குட்டியை தூக்கியவர் பதறியடித்து ஓட்டம்” - சாலையில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம் ஓய்.எஸ்.ஆர் கட்சியின் செய்தி தொடர்பாளரான கொண்டா ராகவ ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நஷ்கலப்பள்ளி கிராமம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் பூனை ஒன்று தலையில் சொம்பு மாட்டிக் கொண்டதால் அவதிப்பட்டுக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த ராகவ ரெட்டி பூனைக்கு உதவலாம் என நினைத்து காரை நிறுத்தினார்.

பிறகு காரில் இருந்து இறங்கி பூனையைத் தூக்கினார். அப்போதுதான் தாம் தூக்கியது பூனைக்குட்டி அல்ல புலிக்குட்டி எனத் தெரிந்து உடனே கீழே போட்டுவிட்டு அவர் கார் அருகே ஓடினார்.

பின்னர் புலிக்குட்டியும் அங்கிருந்து புதருக்குள் ஓடிவிட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கொண்டா ராகவ ரெட்டி காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். புலிக்குட்டியை பிடித்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொண்டாராகவ ரெட்டி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஊசி போட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories