வைரல்

“முழு ஆட்டுக் கிடாய்க்குள் கடல் உணவுகள்” : கமகமக்கும் வில்லேஜ் குக்கிங் சேனலின் லேட்டஸ்ட் வீடியோ!

வில்லேஜ் குக்கிங் சேனல்' வெளியிட்டுள்ள புதிய வீடியோ யூ-ட்யூபில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“முழு ஆட்டுக் கிடாய்க்குள் கடல் உணவுகள்” : கமகமக்கும் வில்லேஜ் குக்கிங் சேனலின் லேட்டஸ்ட் வீடியோ!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குழுவினர் நடத்திவரும் சமையல் சேனலான 'வில்லேஜ் குக்கிங் சேனல்' யூடியூபில் மிகவும் பிரபலம்.

‘வில்லேஜ் குக்கிங் சேனல்' யூ-டியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற தென்னிந்தியாவின் முதல் யூ-ட்யூப் சேனல் என்ற பெருமையையும் பெற்றது. இதற்கான அங்கீகாரமாக யூ-ட்யூப் நிறுவனம் இவர்களுக்கு டைமண்ட் பட்டன் அளித்துள்ளது.

பல்வேறு வகையான உணவுகளை கிராமத்து மண்மணத்தோடு செய்து, வீடியோ பார்ப்பவர்களின் நாவில் எச்சில் ஊறவைக்கும் இவர்கள், தற்போது செய்துள்ள புதிய ரெசிபி அனைவரையும் கவர்ந்துள்ளது.

முழு ஆட்டுக்கிடாய்க்குள் நண்டு, இறால், கணவாய் மீன் ஆகியவற்றைப் பொதிந்து, மசாலாக்களை தடவி, ஆட்டை நூலால் தைத்துத் சமைத்துள்ளனர். ஆடும், அதனுள்ளிருக்கும் கடல் உணவுகளும் நன்றாக வெந்து ருசிகூட்டியுள்ளன.

இந்த வீடியோ யூ-ட்யூபில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியிடப்பட்டு ஒரே நாளில் 2 கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories