வைரல்

”பாக்சிங்க விட இது ரத்த பூமி” - வாத்தியாரை அறிமுகம் செய்த கபிலன் : ஆர்யா - பசுபதி ட்வீட் படு வைரல்!

”நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி உக்காந்துக்குறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டு போ கபிலா” என நடிகர் பசுபதி ட்வீட் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

”பாக்சிங்க விட இது ரத்த பூமி” - வாத்தியாரை அறிமுகம் செய்த கபிலன் : ஆர்யா - பசுபதி ட்வீட் படு வைரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படம் அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

குறிப்பாக கபிலன், ரங்கன் வாத்தியார் என ஆர்யா மற்றும் பசுபதியின் கதாபாத்திரங்களே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ‘வாத்தியாரே’ என கபிலன் சைக்கிளில் ரங்கன் வாத்தியார் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரசித்தமானது.

மேலும், நடிகர் பசுபதியின் பெயரில் ட்விட்டரில் ஏராளமான போலி கணக்குகளும் செயல்பட தொடங்கின. இந்நிலையில், நடிகர் பசுபதியின் உண்மையான ட்விட்டர் கணக்கை நடிகர் ஆர்யா தனது பக்கத்தில் அறிமுகப்படுத்தி ‘கபிலன்’ பாணியிலேயே பதிவிட்டுள்ளார்.

அதில், “வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே. பாக்சிங்க விட ரத்த பூமி. உன்னோட பேர்ல இங்க நெறைய பேரு இருக்காங்கனு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தாண்டானு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசுதான். வா.. வாத்தியாரே இந்த வேர்ல்ட் உள்ள போலாம்” எனக் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவின் இந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த நடிகர் பசுபதி, “ஆமாம்.. கபிலா, பாக்சிங்கே உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுனா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி உக்காந்துக்குறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டு போ” என கமென்ட் செய்துள்ளார்.

பசுபதி மற்றும் ஆர்யாவின் இந்த பதிவுகள் வைரலாகி ட்விட்டர் பயனர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories