வைரல்

"ZOOM செயலி பாதுகாப்பானது அல்ல" - வீடியோ கான்ஃப்ரன்ஸ் செய்ய மத்திய அரசு நெறிமுறைகள் அறிவிப்பு !

இதுவரை ஜூம் ஆப் பயனர்கள் 60 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என தரவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

"ZOOM செயலி பாதுகாப்பானது அல்ல" -  வீடியோ கான்ஃப்ரன்ஸ் செய்ய மத்திய அரசு நெறிமுறைகள் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். இதில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பணியாளர்களே அதிகமாக உள்ளனர். ஆகையால் இணைய சேவையை பயன்படுத்தி பணிபுரிந்து வருகிறார்கள்.

மேலும், அலுவல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் சந்திக்கவேண்டும் என்பதற்காக, இணையத்தை பயன்படுத்தி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி, கல்லூரிகளும் விடுமுறையில் உள்ளதால், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் பாடம் எடுத்து வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளால் இணையத் தேவையும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

"ZOOM செயலி பாதுகாப்பானது அல்ல" -  வீடியோ கான்ஃப்ரன்ஸ் செய்ய மத்திய அரசு நெறிமுறைகள் அறிவிப்பு !

இதில் சிக்கல் என்னவெனில், வீடியோ கான்ஃப்ரஸ்காக பயன்படுத்தப்படும் ZOOM செயலி பாதுகாப்பானது அல்ல என்றும், அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில், ZOOM செயலியை பயன்படுத்துவோரின் விவரங்கள், வீடியோ கால் மூலம் பெறப்படும் விவரங்கள் என அனைத்தையும் கள்ளச் சந்தையில் ஹேக்கர்கள் ரூ.23 லட்சம் ரூபாய்க்கு விற்பதாக தெரிகிறது.

இதுவரையில், 60 ஆயிரத்துக்கும் மேலான Zoom கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. எளிதில் சைபர் தாக்குதல் கொண்ட செயலியாக இருப்பதால் இதனை உபயோகிக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், அவ்வாறு உபயோகிக்கும் பட்சத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி கூறியுள்ளது.

"ZOOM செயலி பாதுகாப்பானது அல்ல" -  வீடியோ கான்ஃப்ரன்ஸ் செய்ய மத்திய அரசு நெறிமுறைகள் அறிவிப்பு !

1. ஒவ்வொரு உரையாடலின் போதும், புதிய கணக்கும், பாஸ்வேர்டும் உருவாக்க வேண்டும்.

2. காத்திருப்பு வசதியை பயன்படுத்த வேண்டும். அழைப்பாளரின் அனுமதி இல்லாமல் புதியவர் காணொளியில் இணையக் கூடாது.

3. காணொளியாடலுக்காக அழைப்பதற்கு முன் பங்கேற்பாளர்கள் இணைந்து கொள்ளும் வசதியை (join feature) முடக்க வேண்டும்.

4. அழைப்பாளர் மட்டுமே திரைப்பகிர்வு (screen sharing) செய்ய முடியும்.

5. வெளியேற்றப்பட்ட பங்கேற்பாளர்களை மறு இணைப்பு' செய்யும் வசதியை முடக்க வேண்டும்.

6. கோப்பு பரிமாற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது முடக்க வேண்டும்.

7. பங்கேற்பாளர்கள் அனைவரும் உரையாடலில் இணைந்த பிறகு காணொளியாடலைப் பாதுகாக்க வேண்டும்.

8. ஒலி/ஒளி பதிவு செய்யும் வசதியைக் கட்டுப்படுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories