வைரல்

கொரோனாவுக்கும் இன்றைய கூகுள் டூடுலுக்கும் என்ன சம்பந்தம்? யார் இந்த இக்னேஸ் செமல்வெய்ஸ்? #Corona

கூகுளின் இன்றைய டூடுலுக்கும் கை கழுவும் பழக்கத்திற்கும் மிகப்பெரும் தொடர்பு உண்டு.

கொரோனாவுக்கும் இன்றைய கூகுள் டூடுலுக்கும் என்ன சம்பந்தம்? யார் இந்த இக்னேஸ் செமல்வெய்ஸ்? #Corona
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோரைக் காவு வாங்கியிருக்கும் கொரோனா கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கூகுளின் இன்றைய டூடுலுக்கும் கை கழுவும் பழக்கத்திற்கும் மிகப்பெரும் தொடர்பு உண்டு. கைகளைக் கழுவுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகளை உலகுக்கு முதன்முதலில் உணர்த்திய மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸ் தான் இன்றைய கூகுள் டூடுலில் இடம்பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், கை கழுவுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகளை விளக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோ கொண்ட கூகுள் டூடுல் முக்கியத்துவம் பெறுகிறது.

கொரோனாவுக்கும் இன்றைய கூகுள் டூடுலுக்கும் என்ன சம்பந்தம்? யார் இந்த இக்னேஸ் செமல்வெய்ஸ்? #Corona

மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸ் ஹங்கேரி நாட்டில் 1818-ல் பிறந்தவர். வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1847-ல் இவர் வியன்னா பொது மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் சைல்ட் பெட் ஃபீவர் (childbed fever) என்றொரு காய்ச்சல் காரணமாக பிறப்பின்போது நிகழும் குழந்தை இறப்பு விகிதம் ஐரோப்பா முழுவதுமே அதிகமாக இருந்தது. அதைத் தவிர்க்க பிரசவத்துக்கு முன்னதாக கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் குறித்து மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மருத்துவர்கள் மகப்பேறு சிகிச்சையின்போது கைகளைக் கழுவிவிட்டு பிரசவம் பார்த்தாலோ அறுவைசிகிச்சை மேற்கொண்டாலோ சிசுவுக்கு சைல்ட் பெட் ஃபீவர் தொற்று ஏற்பட்டு குழந்தைகள் இறப்பது வெகுவாகக் குறைந்தது. இது மருத்துவ உலகில் பெறும் வரவேற்பைப் பெற்றது.

உலகுக்கே கை கழுவுதலின் மருத்துவ நன்மைகளை உணர்த்திய மருத்துவர் இக்னேஸ் ஒரு தொற்று காரணமாகவே உயிர் நீத்தார். பின் நாளில் அவரது பரிந்துரைகள், ஆராய்ச்சிகள் தொகுக்கப்பட்டு "germ theory of disease" என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டது.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதல் பரிந்துரை கைகளை முறையாகக் கழுவவேண்டும் என்பதுதான். இதனை உணர்த்தும் வகையில் கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் வீடியோவில் மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories