வைரல்

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலிஸார் வழங்கிய நூதன தண்டனை!

ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு மத்திய பிரதேச போலிஸார் வித்தியாசமான தண்டனை விதித்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலிஸார் வழங்கிய நூதன தண்டனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டது. இதில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து போலிஸாரால் நடத்தப்பட்டது. மேலும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அப்போது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலிஸார் வித்தியாசமான தண்டனை ஒன்றை விதித்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலிஸார் வழங்கிய நூதன தண்டனை!

அதாவது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களிடம், ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்தை சுருக்கமாக 100 வார்த்தைகளில் எழுதித்தருமாறு போலிஸார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து போலிஸார் கூறுகையில், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்துக்கூறினோம். இதன்மூலம் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories