வைரல்

மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர உதவும் விரல் முத்திரை! - நலம் நலம் அறிக!

மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் மருந்து மாத்திரை இல்லாத வைத்தியத்தை மேற்கொள்ள சித்த மருத்துவர் கல்பனா தேவி பரிந்துரைக்கும் புதிய வழி.

மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர உதவும் விரல் முத்திரை! - நலம் நலம் அறிக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நவீன உலகில் வாழும் நாம் அனைவரும் என்னதான் பொதுவெளியில் சிரித்து மகிழ்ந்து வெளிப்படுத்தி வந்தாலும், நம்மில் பலருக்கு அது அகம் வழியே வெளிவரும் சிரிப்பாக அல்லாமல், வெறும் முகம் வழியே வெளிப்படுத்தும் சிரிப்பாகவே இருக்கிறது.

குடும்பம், சமுதாயம், பணிபுரியும் இடம் என பல்வேறு சூழல்களால் சூழப்பட்டுள்ள நாம் பலதரப்பட்ட பிரச்னைகளால் நாள்தோறும் பாதிக்கப்பட்டுக் கொண்டேதான் வருகிறோம்.

இது போன்ற பாதிப்புகளால் வெளித் தோற்றத்தில் எவ்வித மாறுதல்களும் தெரியாவிட்டாலும், புறத்தோற்றத்தை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே நம்முடைய மன அழுத்தம் எப்படி இருக்கும் என தெரியவரும்.

மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர உதவும் விரல் முத்திரை! - நலம் நலம் அறிக!

இந்த மன அழுத்தங்களை வெளியே சொல்லாமல், நமக்கு உரியவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவதியுறுபவர்கள் பலர் மருத்துவர்களை நாடி எக்கச்சக்கமான மருந்துகளை உட்கொண்டு அதனால் பல்வேறு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறோம்.

மன அழுத்தங்களால் பெரும்பாலும் இதயங்களே பலவீனமடைகின்றன. இதனால் பலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இவற்றையெல்லாம் சீர் செய்ய எவ்வித மருந்துகளும் எதுவும் உட்கொள்ளாமல் நம்முடைய ஐம்புலன்களின் வழியே மன அழுத்தங்களை ஒழிக்கும் செய்முறையுடன் விளக்குகிறார் வர்ம மற்றும் சித்த மருத்துவர் கல்பனா தேவி.

அதில், மன அழுத்தங்களால் ஏற்படும் நெஞ்சு வலி பாதிப்பை தடுக்கும் ‘சூன்ய முத்திரை’யை காலை மற்றும் இரவு சமயத்திலோ அல்லது நெஞ்சுவலி ஏற்படும் சமயத்தில் வெறும் 5 நிமிடம் செய்து வந்தால் போதும் என மருத்துவர் கல்பனா தேவி கூறுகிறார்.

இந்த சூன்ய முத்திரை அதிகமாக சிந்திக்கக் கூடிய பெண்களுக்கு மிகவும் உதவும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆரோக்கியமில்லாத சிந்தனைகளையும், மன அழுத்தங்களையும் விரட்டியடித்து இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்.

banner

Related Stories

Related Stories