வைரல்

கிலோ வெங்காயம் ரூ.100 : மண மக்களுக்கு பரிசாக வெங்காயம் கொடுத்த நண்பர்கள் - ட்ரெண்ட் ஆகும் புது பரிசு !

திருமண ஜோடிகளுக்கு நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக வழங்கியுள்ளது வேடிக்கையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நாட்டு நடப்பை சித்தரிக்கும் வகையில் உள்ளது.

கிலோ வெங்காயம் ரூ.100 : மண மக்களுக்கு பரிசாக வெங்காயம் கொடுத்த நண்பர்கள் - ட்ரெண்ட் ஆகும் புது பரிசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு மழைப்பொழிவால் விளைச்சல் குறைந்தது.

வெங்காய உற்பத்தி குறைந்ததால் மற்ற மாநிலங்களுக்கான வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆகையால், வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்ததால் இல்லத்தரசிகளின் கண்களில் வெங்காயத்தை உரிப்பதற்கு முன்பே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் பாகல்கோட்டை பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில், மணமக்களுக்கு ஒரு பெட்டியில் வெங்காயத்தை வைத்து நண்பர்கள் பரிசாக அளித்துள்ளனர். அந்த வெங்காய பரிசுடன் மணமக்களும், நண்பர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதேபோல, தமிழகத்தின் கடலூர் மஞ்ச குப்பம் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் ஷாகுல்-சப்ரீனா என்ற மணமக்களுக்கு நண்பர்கள் அனைவரும் வெங்காயத்தை பரிசாக கொடுத்துள்ளனர். இது அங்குள்ளவர்களை சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதே நிலமை தொடர்ந்தால் வெங்காயத்தை வெறும் கண்ணால் மட்டுமே காணமுடியும் அளவுக்கு வந்துவிடும் என இந்த புகைப்படங்களை காண்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் போதும் இது போன்று மணமக்களுக்கு நண்பர்கள் லிட்டர் கணக்கில் பெட்ரோலை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

இவை ஒருபக்கம் கிண்டலுக்கு உரியதாக இருந்தாலும், நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவார்கள். ஆனால், அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories