வைரல்

கர்நாடகாவில் நாயை புலியாக்கிய விவசாயி - காரணம் என்ன தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க தனது வீட்டு நாயை புலியாக மாற்றியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி நலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீகாந்த். இவர் தனது தோட்டத்தில் பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகிறார்.

இவரது தோட்டம் மலையடிவாரத்தில் உள்ளதால் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்துள்ளன. குரங்குகளை பயமுறுத்தும் விதமாக ஸ்ரீகாந்த் புலி பொம்மைகளை வாங்கி தோட்டத்தில் வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் பொம்மை புலியை உண்மை என நம்பி குரங்குகள் பயந்துள்ளன. பின்னர் அவை பொம்மை என தெரியவந்ததும் மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தத் தொடங்கியுள்ளன.

கர்நாடகாவில் நாயை புலியாக்கிய விவசாயி - காரணம் என்ன தெரியுமா?

இதனையடுத்து, குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க தனது வீட்டு நாயை புலியாக மாற்ற முடிவெடுத்துள்ளார். அதன்படி, மனிதர்கள் தலைமுடிக்குப் பூசும் ‘டை’ கொண்டு நாயின் உடம்பில் புலி போன்று வரி வரியாக வரைந்துள்ளார்.

பின்னர் இந்த நாயை அவ்வப்போது தோட்டத்துக்குள் உலாவவிட்டுள்ளார். நாயைப் புலி என நம்பிய குரங்குகள் தோட்டத்துப் பக்கம் சமீபகாலமாக வரவில்லை என விவசாயி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்தின் இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதால், அவரது கிராமத்தைச் சேர்ந்த மற்ற விவசாயிகளும் இதே போன்று, நாய்க்கு புலி வேஷம் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories