வைரல்

’கை’யில்லை - நம்பிக்’கை’ உண்டு: கால்களால் உழைத்து நிதியுதவி செய்த மாற்றுதிறனாளி - நெகிழ்ந்த கேரள முதல்வர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரணவ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரை முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து பாராட்டினர்.

’கை’யில்லை - நம்பிக்’கை’ உண்டு: கால்களால் உழைத்து நிதியுதவி செய்த மாற்றுதிறனாளி - நெகிழ்ந்த கேரள முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரளாவை தாக்கிய கன மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமே சின்னபின்னமாகியது. கேரள மக்கள் படும் வேதனைகளை அறிந்து அம்மக்களுக்கு அண்டை மாநில மக்களும் உதவிக் கரம் நீட்டினர். வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா மீண்டு வந்தாலும், மறு சீரமைப்பு பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பிரணவ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கேரள முல்வரிடம் வெள்ள சீரமைப்புக்கு நிதியுதவி அளித்த சம்பவம் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

கேரளாவின் அல்தூரைச் சேர்ந்தவர் பிரணவ். இவர் ஓவியராக பணியாற்றிவருகிறார். இவர் தனது ஊதியத்தில் இருந்து சிறிய தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளார்.

அதற்காக கேரள முதல்வர் அலுவலகத்திற்கு அவர் வந்த பிரணவ்வைப் பார்த்து அதிகாரிகள் வியந்து போயுள்ளனர். இரண்டு கைகளும் இல்லாத பிரணவ், தனது கால்களை கைகளாகக் கொண்டே தனது வாழ்க்கைய நம்பிக்கியுடன் வாழ்ந்து வருகிறார். ஓவியங்களுக்கு தன் கால்களைக் கொண்டே வண்ணம் தீட்டுகிறார்.

பிரணவின் இந்த நிலையிலும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை அறிந்த அதிகார்கள் அவரை முதல்வரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு பிரணவ் முதல்வரைச் சந்தித்து தான் சேர்த்துவைத்த பணத்தை நிவாரணநிதியாக தனது கால்களாலே வழங்கினார். அதை அவமானமாக எண்ணாத முதல்வர் பினராயி விஜயன், அதனைப் பெற்றுக் கொண்டு, பிரணவின் சமூக அக்கறையை வாழ்த்தினார்.

அதோடு இல்லாமல், இருவரும் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்தனர். செல்போனை லாவகமாக தனது கால் விரல்களின் இடையே பிடித்தபடி செல்ஃபி எடுத்தார் பிரணவ். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இன்று காலை ஒரு உணர்வுப்புர்வமான அனுபவம் நடந்தது. அல்தூரைச் சேர்ந்த பிரணவ் சி.எம்.டி.ஆர்.எஃப்-க்கு தனது பங்களிப்புகளை ஒப்படைக்க சட்டமன்ற அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் அளித்த ஆதரவுக்கு பிரணவ் மகிழ்ச்சி அடைவதாகவும் நன்றி தெரிவித்தார்” என அவர் அதில் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளது.

banner

Related Stories

Related Stories