வைரல்

எமர்ஜென்ஸி லேண்டிங்.. பதறிய அதிகாரிகள்.. கூலாக கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி - வைரல் வீடியோ

ஹரியானாவில் உள்ள கல்லூரியில் இளைஞர்களுடன் ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எமர்ஜென்ஸி லேண்டிங்.. பதறிய அதிகாரிகள்.. கூலாக கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி - வைரல் வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம், புதுச்சேரியை போன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி, ஹரியானா, மகாராஷ்டிராவிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் அந்த மாநிலங்களில் முகாமிட்டு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள மகேந்திராகர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பிரசாரத்தை முடித்து டெல்லிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார்.

அப்போது மோசமான வானிலை காரணமாக ரேவேரி என்ற பகுதியில் உள்ள கே.எல்.பி. கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அந்த சமயம், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ராகுல் காந்தியைக் கண்டதும் வியப்படைந்தனர்.

ராகுல் காந்தியும் அந்த இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். உற்சாகமாக இளைஞர்கள் வீசிய பந்தை ராகுல்காந்தி எதிர்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories