வைரல்

ஊழியரின் கழுத்தில் ஷூ காலால் மிதிக்கும் உரிமையாளர் : பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- வைரல் வீடியோ!

தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களை ஷூ காலால் தாக்கும் உரிமையாளரின் கொடூர செயல் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஊழியரின் கழுத்தில் ஷூ காலால் மிதிக்கும் உரிமையாளர் : பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் செயல்பட்டு வருகிறது பெங்களூரு செக்யூரிட்டி ஃபோர்ஸ் என்ற நிறுவனம். இதன் உரிமையாளர் சலீம் கான். இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியுற வைத்துள்ளது.

ஊழியரின் கழுத்தில் ஷூ காலால் மிதிக்கும் உரிமையாளர் : பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- வைரல் வீடியோ!

அதில், பி.எஸ்.எஃப் (பெங்களூரு செக்யூரிட்டி ஃபோர்ஸ்) நிறுவன உரிமையாளர் சலீம் கான் தன்னிடம் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை தரையில் போட்டு அடித்து உதைத்து, ஷூ காலால் மார்பிலும், கழுத்திலும் மிதித்து சித்ரவதை செய்கிறார்.

ஊழியரின் கழுத்தில் ஷூ காலால் மிதிக்கும் உரிமையாளர் : பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- வைரல் வீடியோ!

அப்போது, யாரைக் கேட்டு இவ்வாறு செய்தாய். யார் இதனை செய்யச் சொன்னது என இந்தியில் கேட்கிறார் சலீம். அதற்கு, ஒருவர் எங்களை விட்டுடுங்கள், இனி இதுபோன்று செய்ய மாட்டேன் என்றும், மற்றொறுவர் அடித்துக்கொள்ளுங்கள் ஆனால் எனக்குத் தெரியாது எனவும் பதிலளிக்கிறார்.

சலீம் கான் ஊழியர்களை கொடூரமாகத் தாக்கும் போது அவருடன் மேலும் ஐந்து பேர் இருந்துள்ளனர். ஊழியர்களை தாக்கியது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலானதைக் கண்ட போலிஸார் தாமாக முன்வந்து சலீம் கான் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சிக்கான சட்டப்பிரிவு 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சலீமை கானை போலிஸார் கைது செய்தனர். இதனையறிந்து தலைமறைவான சலீம் கானின் கூட்டாளிகளை போலிஸார் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை இணை ஆணையர் இஷா பண்ட் கூறியுள்ளார்.

ஊழியரின் கழுத்தில் ஷூ காலால் மிதிக்கும் உரிமையாளர் : பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- வைரல் வீடியோ!

மேலும், சலீம் கான் அசாம் மாநிலத்தின் கரிம்காஞ்ச் பகுதியில் இருந்து தொழில் நிமித்தமாக பெங்களூரு வந்திருப்பதாகவும், HSR லேஅவுட் பகுதியில் உள்ள நிறுவனத்தை ஆறு மாதத்திற்கு முன்புதான் தொடங்கியுள்ளதாக கூறியுள்ள போலிஸ் தரப்பு சலீம் கான் மீது ஏற்கெனவே வெவ்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories