வைரல்

#VIRALVIDEO : உ.பி.யில் காவல் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் குரங்கு!

உத்திரபிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைக்கு, குரங்கு ஒன்று மசாஜ் செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#VIRALVIDEO : உ.பி.யில் காவல் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் குரங்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் திவேதி என்பவர், மனஅழுத்தத்தை போக்க குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.

அண்மையில் அவர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி குரங்கு ஒன்று அவருக்கு தலையில் மசாஜ் செய்து கொண்டிருந்தது.

குரங்கு தன் மீது அமர்ந்திருந்தும், அதனை பொருட்படுத்தாது காவலர் இயல்பாக தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இந்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories