வைரல்

புதுச்சேரியில் போலீசுக்கு‘அடி-உதை’: ரவுடிகள் வெறிச்செயல்- வைரல் வீடியோ!

புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு போலீசார் மீது ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரியில் போலீசுக்கு‘அடி-உதை’: ரவுடிகள் வெறிச்செயல்- வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் மீது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோசப் தடையைமீறி ஊருக்குள் வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீசார் சிவகுரு, மைக்கேல் ஆகியோர் உடனே அங்கு சென்றனர். அப்போது கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஜோசப் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரிடம், 144 தடை உத்தரவு போட்டிருப்பதால் ஊருக்குள் இருக்கக்கூடாது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜோசப் போலீசார் சிவகுருவை சரமாரி தாக்கினர். அப்போது தடுக்க வந்த மற்றொரு போலீசார் மைக்கேலை ஜோசப்பின் தம்பி தமிழ் பிடித்துக் கொண்டார்.

இதனால் இதனால் அவருக்கும் அடிவிழுந்தது. இதையடுத்து ஜோசப்பும் தமிழும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை போலீசாரை தாக்கிய ரவுடிகளை கைது செய்யக்கோரி, கரிக்கலாம்பாக்கம் பொதுமக்கள் புதுச்சேரி- கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories