வைரல்

ஆயுள் முடிந்த செயற்கைக்கோள்கள் எங்கு விழும்? - பூமியில் இந்த மர்ம இடம் பற்றி தெரியுமா?

செயற்கைக் கோள்களின் ஆயுட்காலம் முடிந்த பிறகு பூமியில் விழும் பகுதி எது என்பது குறித்த விவரங்கள்.

ஆயுள் முடிந்த செயற்கைக்கோள்கள் எங்கு விழும்? -  பூமியில் இந்த மர்ம இடம் பற்றி தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பூமிக்கு மேலே ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் நித்தமும் சுற்றி வருகின்றன. இவை அனைத்தும் மனிதனுக்கான செயல்பாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதாலேயே செயற்கைக் கோள்களுக்கும் குறிப்பிட்ட வாழ்நாள் உள்ளது. மேலும், அவை இயங்கத் தொடங்கியதும் மனிதர்கள் உள்ளிட்ட மற்ற உயிர் வாழ் இனங்கள் போன்று செயற்கைக் கோள்களுக்கு கிடைக்கும் எரிபொருட்கள் போன்ற பல காரணிகளை பொறுத்தே அமையும்.

ஆயுள் முடிந்த செயற்கைக்கோள்கள் எங்கு விழும்? -  பூமியில் இந்த மர்ம இடம் பற்றி தெரியுமா?

விண்வெளியிலும், பூமிக்கு அருகே சுற்றக்கூடிய செயற்கைக்கோள்கள் எவையேனும் இயங்காவிட்டால் அவற்றின் எடையை பொறுத்தே அவைகளை செயலிழக்கச் செய்ய முடியும்.

இதற்காகவே நியூசிலாந்தின் தென்மேற்கே உள்ள தெற்கு பசிபிக் பெருங்கடலுக்கு அருகே ‘நெமோ புள்ளி’ என்ற கடல் துருவம் உள்ளது. இது, 42 டிகிரி 52.6 நிமிடங்கள் தென் அட்சரேகை மற்றும் 123 டிகிரி 23.6 நிமிடங்கள் மேற்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது.

ஆயுள் முடிந்த செயற்கைக்கோள்கள் எங்கு விழும்? -  பூமியில் இந்த மர்ம இடம் பற்றி தெரியுமா?

நிலப்பகுதியில் இருந்து சுமார் 2,250 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நெமோ புள்ளியில் தான் செயலிழந்த அல்லது செயலிழந்துக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களை அழிக்கப்படுகின்றன. ஆகையாலேயே இந்த பகுதியை விண்கல கல்லறை என நாசா விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.

மனித நாகரிகமே இல்லாத ஒரு பகுதியாகவே இந்த நெமோ புள்ளி உள்ளது என நாசா தெரிவிக்கிறது. நொறுங்கிய சில செயற்கைக்கோள்கள் பூமியை நோக்கி விழும் போது அதற்கான நீர்நிலை கல்லறையாக உள்ளது.

ஆயுள் முடிந்த செயற்கைக்கோள்கள் எங்கு விழும்? -  பூமியில் இந்த மர்ம இடம் பற்றி தெரியுமா?

மேலும், இந்த நெமோ பகுதியில் மனித உயிர்களை தவிர கப்பல்கள் போன்ற போக்குவரத்துகளும் இங்கு செயல்படுவது அரிதுதான். ஆகவே அவற்றுக்கான இழப்புகள் இந்த பகுதியில் குறைவாக மதிப்பிடப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள விண்வெளி நிறுவனங்கள் இந்த பகுதியில் சுமார் 260க்கும் மேற்பட்ட விண்கலங்களை மூழ்கடித்துள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விண்கல கல்லறையில், 150 க்கும் மேற்பட்ட விண்கலங்களின் இறுதி உறைவிடமாக இந்த பகுதி உள்ளது.

ஆயுள் முடிந்த செயற்கைக்கோள்கள் எங்கு விழும்? -  பூமியில் இந்த மர்ம இடம் பற்றி தெரியுமா?

இதில், ரஷ்யாவின் 6 சால்யுட், மிர் விண்வெளி நிலையம், இ.எஸ்.ஏவின் 5 தானியங்கி பரிமாற்ற வாகனங்கள், ஜப்பானின் 4 எச்.டி.வி சரக்கு பொருட்கள், ரஷ்யாவின் 145 தன்னாட்சி கப்பல்கள் என பல உள்ளன.

banner

Related Stories

Related Stories