வைரல்

“கல்விக்கு வயது ஒரு தடையல்ல” - என்ன செய்தார் இந்த பஞ்சாப் சிங்கம்?!

பஞ்சாப்பை சேர்ந்த 83 வயது முதியவர் ஒருவர் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

 “கல்விக்கு வயது ஒரு தடையல்ல” - என்ன செய்தார் இந்த பஞ்சாப் சிங்கம்?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் சோஹன் சிங். 83 வயதாகும் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலை பட்டத்தினை பெற்றார். 1958ல் திருமணமான பிறகு, அவர் தனது மனைவியுடன் கென்யாவில் குடியேறினார்.

1991ல் இந்தியா திரும்பினார். இதற்கு முன்னர் பணியாற்றிய கல்லூரியின் துணை முதல்வரின் ஆலோசனையின்பேரில் கடந்த 2017ல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கினார்.

ஜலந்தரில் உள்ள லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுகலைப்பாடப் பிரிவில் சேர்ந்தார். மிகத் திறமையாக படித்து தற்போது, ஆங்கில பாடத்தில் முதுகலைப்பட்டத்தை அவர் பெற்றுள்ளார். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

 “கல்விக்கு வயது ஒரு தடையல்ல” - என்ன செய்தார் இந்த பஞ்சாப் சிங்கம்?!

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆங்கில பாடத்தில் முதுகலைப்பட்டம் பெறுவதற்கு முழு முயற்சியில் இறங்கினேன். தற்போது பட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவில் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வேலை தேடி நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை என்றார் சோஹன் சிங்.

‘வயது என்பது வெறும் எண்’ மட்டுமே என்பதை நிரூபித்த சோஹன் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories