வைரல்

“பி.வி.சிந்துவை எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” - கலெக்டரிடம் முதியவர் நூதன மனு!

பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார் 70 வயது முதியவர்.

“பி.வி.சிந்துவை எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” - கலெக்டரிடம் முதியவர் நூதன மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. இதனையடுத்து சிந்துவுக்கு பலர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் வாராவாரம் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ராமநாதபுரத்திலும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது.

“பி.வி.சிந்துவை எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” - கலெக்டரிடம் முதியவர் நூதன மனு!

இதில், ஏராளமான மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அப்போது 70 வயதான மலைச்சாமி என்ற முதியவர் நூதன கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.

அதில், தனக்கு விளையாட்டுத் துறையில் அதீத ஆர்வம் இருப்பதாகவும், உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவை தான் காதலித்து வருவதால் அவரை மணமுடிக்க ஆசைப்படுகிறேன் என எழுதியுள்ளார்.

“பி.வி.சிந்துவை எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” - கலெக்டரிடம் முதியவர் நூதன மனு!

அதுமட்டுமல்லாமல், சிந்து எங்கு இருந்தாலும் அவரைத் தூக்கி கொண்டுவந்து திருமணம் முடிப்பேன் என்றும், அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மலைச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். முதியவரின் இந்தக் கோரிக்கை அனைவரையும் திகைப்படையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories