வைரல்

‘டிக்-டாக்’ படுத்தும்பாடு : நடுரோட்டில் தனது ஜீப்பையே பெட்ரோல் ஊற்றி எரித்த தொழிலதிபர்- வைரலாகும் வீடியோ!

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டிக்-டாக் வீடியோவில் வெளியிடுவதற்காக தனக்கு சொந்தமான ஜீப்பை நடுரோட்டில் எரித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

‘டிக்-டாக்’ படுத்தும்பாடு : நடுரோட்டில் தனது ஜீப்பையே பெட்ரோல் ஊற்றி எரித்த தொழிலதிபர்- வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரைச் சேர்ந்தவர் இந்திரஜித் சிங் ஜடேஜா. தொழிலதிபரான இவர், விளம்பரப்பிரியர்.

அவர் தன்னுடைய விளம்பர வேட்கையை வெளிப்படுத்த டிக்-டாக் வீடியோவை பயன்படுத்த நினைத்தார். உலகம் முழுவதும் தான் அறியப்பட வேண்டும் என்ற ஆசையின் காரணமாக ராஜ்கோட் நகரின் நடுரோட்டில் தன் விலை உயர்ந்த ஜீப்பை கொண்டு வந்து நிறுத்தினார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தp பகுதியில், அவர் சாவகாசமாக ஜீப்பை விட்டு இறங்கிய பின்னர், ஜீப் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுk கொளுத்தினார். ஜீப்பில் தீ பரவி மளமளவென எரியத் தொடங்கியது. அதைp பார்த்துக்கொண்டே இந்திரஜித் சிங் போஸ் கொடுக்கும் வீடியோ டிக்-டாக்கில் அவரது நண்பரின் உதவியுடன் பகிரப்பட்டது.

எரிந்து கொண்டிருந்த ஜீப்பை, தீயணைப்புp படைவீரர்கள் அணைத்தனர். பின்னர், இதுகுறித்து இந்திரஜித் சிங் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

டிக்-டாக் வீடியோவிற்காக இந்திரஜித் செய்த இந்த விபரீத செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜீப்பின் டீசல் டேங்க் வெடித்திருந்தால் பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். எனவே, இந்திரஜித் சிங்கிற்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

இதனிடையே ஜீப்பிற்கு இந்திரஜித் சிங் தீ வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories