வைரல்

திறமைக்கு வறுமை தடையில்லை : வைரலாகும் zomato டெலிவரி பாய் வீடியோ - விரைவில் சினிமா பாடகர் ?!

வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்று பிரபல இந்தி பாடலை பாடி அசத்திய zomato டெலிவரி பாயின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

திறமைக்கு வறுமை தடையில்லை : வைரலாகும் zomato டெலிவரி பாய் வீடியோ  - விரைவில் சினிமா பாடகர் ?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமீபகாலமாக zomato, swiggy, uber உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மக்களை வேகமாகச் சென்று சேர்ந்துள்ளது. அதில் பல திறமைகள் கொண்ட பட்டதாரி இளைஞர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உழைத்து வருகிறார்கள். தற்போது அதில் ஒரு zomato டெலிவரி பாய் ஒருவர் பாட்டு பாடும் காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் அனிர்பன் சக்ரபூர்த்தி என்ற நபர் ஸொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யவிருந்த ப்ரஞ்சித் ஹலொயின் (டெலிவரி பாய்) குறிப்பில், பாடகராக வேண்டும் என்பதே தனது ஆசை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கவனித்த அனிர்பன் உணவு டெலிவரி செய்ய வந்த ப்ரஞ்சித்தை பாட்டு பாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து 1976ல் இந்தியில் வெளியான ‘சிட்சூர்’ என்ற படத்தில் வந்த ‘கோரி தேரா காவ்ன் படா பியரா’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த அனிர்பன், தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதில், பாடகராக வேண்டும் என்ற ப்ரஞ்சித்தின் கனவை நிறைவேற்ற உதவி செய்யுங்கள். அனைவரும் பகிருங்கள் என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, ப்ரஞ்சித் ஹலொய் பாட்டு பாடிய வீடியோ இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேலானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் கீழ் ப்ரஞ்சித்துக்கு ஏராளமானோர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண் ஒருவர் பாடிய பாட்டு வைரலானது. அதனையடுத்து, அவருக்கு பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் தான் இசையமைக்கவிருக்கும் பாலிவுட் படத்தில் பாட வைப்பதாக தெரிவித்திருந்தார்.

தற்போது பாடகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் டெலிவரி பாய் ப்ரஞ்சித்துக்கு சினிமாவில் பாட, நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என நெட்டிசன்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories