வைரல்

சுதந்திர தினத்தை கொண்டாடிய தோடர் இன மக்கள் : பழங்குடியினர்கள் மொழியில் தேசியகீதம் பாடி அசத்தல் !

நாட்டிலேயே முதல் முறையாக பழங்குடியினர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அவர்கள் மொழியில் பாடல் அமைத்து நீலகிரி பழங்குடியின மக்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.

சுதந்திர தினத்தை கொண்டாடிய தோடர் இன மக்கள் : பழங்குடியினர்கள் மொழியில் தேசியகீதம் பாடி அசத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் 73வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களில் தேசியக்கொடியேற்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 73 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சுதந்திர தினத்தை நீலகிரி பழங்குடியின மக்கள் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கக் கூடிய “தோடர் பழங்குடியினர்” மந்து எனப்படும் சிறு குக்கிராமங்களில் பசுமையாக வாழக்கூடியவர்கள். முற்றிலும் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சுதந்திர தினத்தை பாடல்களை அவர்கள் மொழிகளில் பாடல் அமைய வேண்டும் என்ற நோக்கில் சுதந்திர தின பாடலை அவர்கள் மொழியில் பாடியுள்ளனர்.

அத்துடன் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் உதகையில் இருந்து பைக்கரா செல்லும் சாலையில் அமைந்துள்ள பள்ளியில் தேசியக்கொடியுடன் பாடல் பாடி மரியாதை செலுத்தியுள்ளனர்.

பழங்குடியினர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாடல் அமைத்து பாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். பழங்குடியினர்களின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories