வைரல்

மனைவியை தற்கொலைக்குத் தூண்டினாரா ‘பாகுபலி’ நடிகர் ? - கள்ளத்தொடர்பு காரணமா என போலிஸ் விசாரணை 

மனைவி தற்கொலை செய்தது தொடர்பாக ‘பாகுபலி’ பட நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவியை  தற்கொலைக்குத் தூண்டினாரா ‘பாகுபலி’ நடிகர் ? - கள்ளத்தொடர்பு காரணமா என போலிஸ் விசாரணை 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தமிழ், தெலுங்கில் திரைஉலகத்தை கலக்கிய ‘பாகுபலி’ படத்தில் படைத் தளபதிகளில் ஒருவராக நடித்தவர் மதுபிரகாஷ். இவர் சில தெலுங்கு டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். . இவரது மனைவி பாரதி. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

இதனிடையே மதுபிரகாஷ் சக நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதிசந்தேகப்பட்டார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவர் மீது பாரதி போலீசில் புகார் செய்தார். அப்போது, குடும்பத்தினரும், போலீசாரும் சமரசம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

மனைவியை  தற்கொலைக்குத் தூண்டினாரா ‘பாகுபலி’ நடிகர் ? - கள்ளத்தொடர்பு காரணமா என போலிஸ் விசாரணை 

இந்நிலையில் படப்பிடிப்புக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுபிரகாஷை, பாரதி போனில் தொடர்புகொண்டு உடனடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்று அழைத்தார். அப்படி உடனே வராவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் என்றும் மிரட்டினார்.

இதனை மதுபிரகாஷ் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. நிதானமாக இரவு 7.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்த அவர் பாரதி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மனைவி தற்கொலை தொடர்பாக மதுபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories