வைரல்

சென்னையில் அதிகரிக்கும் ஏ.டி.எம் மோசடி : பணம் திருட்டு போகாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 

சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தி, ஏ.டி.எம் கார்டு தகவல்களை திருட முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் ஏ.டி.எம் மோசடி : பணம் திருட்டு போகாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் இயங்கி வரும் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு கோபி என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தனது ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் சொருகி வெளியே எடுத்துள்ளார். அப்படி எடுத்தபோது, அந்த கார்டுடன், உள்ளே இருந்த ஸ்கிம்மர் கருவியும் சேர்ந்தே வெளியே வந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த கோபி அருகில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அங்கு வந்த காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம் இயந்திரத்தை சோதனையிட்டனர். அப்போது அந்த இயந்திரத்தில் சிறிய கேமரா ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்படது. ஸ்கிம்மர் மற்றும் கேமராவை கைப்பற்றிய போலீசார், அதைப் பொருத்திய நபர்கள் யார் என சி.சி.டி.வி உதவியுடன் விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பதால் அடுத்ததடுத்த விசாரணையை அவர்கள் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய குற்றப்பிரிவு போலீசார், “ பொதுமக்கள் ஏ.டி.எம் சென்று பணம் எடுக்கும் முன்பு, ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை நுழைக்கும் இடத்தை சோதனை செய்யவேண்டும். அப்படி கார்டை நுழைக்கும்போதே வழக்கத்தைப் போல இல்லாமல் ஏதாவது தடுக்கும் வகையில், எளிதாக உள்ளே கார்டு செல்லவில்லை என்றால், மெதுவாக அந்த இடத்தை கையால் இழுத்தால் கையோடு அந்த பகுதி வந்துவிடும், பின்னர் ஸ்கிம்மர் இருக்கிறதா என்று பாருங்கள், ஒருவேளை இருந்தால் அருகில் உள்ள காவல்துறைக்கு புகார் அளியுங்கள்.

சென்னையில் அதிகரிக்கும் ஏ.டி.எம் மோசடி : பணம் திருட்டு போகாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 

மேலும் உங்கள் ஏ.டி.எம் பாஸ்வேர்ட் நம்பர் இருக்கும் இடத்தில் கைவைத்து சோதனை செய்யுங்கள், பொதுவாக ஏ.டி.எம் பாஸ்வேர்ட் நம்பரை அழுத்தும் போது உங்களது ஒருகையை மேல வைத்து மறைத்துக்கொள்ளுங்கள். அப்படி மறைக்கும் போது வேறு எந்த வழியிலும் உங்கள் ரகசிய என்னை கன்டுபிடிக்க முடியாது என்கிறார்.

மேலும் அடிக்கடி பண பரிவர்த்தனை செய்வோர் தங்களது ரகசிய எண்னையும் அடிக்கடி மாற்றுவது நல்லது. தொலைபேசியின் மூலம் யாரேனும் வங்கியில் இருந்து பேசுகிறோம் எனக் கூறினால் உங்கள் ரகசிய எண் உள்ளிட்ட தகவல்களைச் சொல்லாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories