வைரல்

இன்ஸ்டாகிராமின் தவறை சுட்டிக்காட்டிய தமிழர் : கெளரவப்படுத்தி பாராட்டிய இன்ஸ்டாகிராம்! (வீடியோ)

இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்த தொழில்நுட்ப பிழையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழரை அந்நிறுவனம் கெளரவப்படுத்தி வெகுமதி அளித்துள்ளது. இது சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் பெற்றுள்ளது.

லக்ஷ்மண் முத்தையா
லக்ஷ்மண் முத்தையா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதன் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதன் பயனர்களுக்கு ஏற்றபடி பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த உடனடி வடிவைப்பின் மூலம் சில கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகளும் வெளிவந்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியின் தொழில்நுட்ப வடிவமைப்பில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாகவும், அதனால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனரின் கணக்கை எளிதாக ஹேக்கர்கள் எடுத்துக்கொள்ள முடியும் எனவும் தமிழகத்தை சேர்ந்த லக்ஷ்மண் முத்தையா கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மண் முத்தையா, கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் செயலியை எளிதில் ஹேக் செய்ய முடியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

இவ்விவகாரம் சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது, "இன்ஸ்டாகிராமில் மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்கு, பயனர்களின் மொபைல் எண்ணுக்கு கன்பர்மேசன் மெசேஜ் அனுப்பப்படும். அந்த அமைப்பில் தான் தொழில்நுட்ப பிழை உள்ளது. அதன் மூலம் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்யமுடியும் என கூறியிருக்கிறார்.

அதனையடுத்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் அந்தப் பிழையை சரி செய்தது. தங்கள் செயலியில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டியதால் லக்ஷ்மண் முத்தையாவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் பாராட்டியுள்ளது. மேலும் அவரை கெளரவப்படுத்தும் விதமாக சுமார் 20 லட்ச ரூபாய் பணத்தை வெகுமதியாக வழங்கியுள்ளது.

முன்னதாக, இவர் ஃபேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டி ஃபேஸ்புக் நிறுவனத்தால் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories