வைரல்

திருநங்கை முதன்மை மேலாளராக நியமித்து ‘அடடே..’ போட வைத்த Swiggy நிறுவனம் : குவியும் பாராட்டுகள் !

Swiggy உணவு டெலிவரி நிறுவனத்தின் முதன்மைத் திட்ட மேலாளராக முதல் முறையாகத் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவரை அந்நிறுவனம் நியமித்துள்ளது.

திருநங்கை முதன்மை மேலாளராக நியமித்து ‘அடடே..’ போட வைத்த Swiggy நிறுவனம் : குவியும் பாராட்டுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

Swiggy உணவு டெலிவரி இந்தியாவின் முக்கியமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரிசையில் உள்ளது. இந்த நிறுவனம் நாட்டின் முக்கியமான நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் திட்ட மேலாளராக முதல் முறையாக திருநங்கை சம்யுக்தா விஜயன் என்பவரை நியமித்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்திற்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

திருநங்கை சம்யுக்தா விஜயன் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியில் பிறந்தவர். இவர் தொழில்நுட்ப வல்லுனராக அமேசான் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார். LGBTQ சமூகத்தினர் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான டவுட்ஸ் டூடியோ என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். சில காலம் வெளிநாடுகளில் பேஷன் டிசைனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது, Swiggy நிறுவனத்தில் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குடும்பத்தின் ஆதரவு இருந்ததால்தான் இந்த நிலைக்கு என்னால் வரமுடிந்தது. ஆனால், இந்த வாய்ப்பு இங்கு உள்ள பல திருநங்கைகளுக்குக் கிடைப்பதில்லை. திருநங்கைகளால் எல்லாத்துறையிலும், சாதனை படைக்க முடியும். அதற்கான ஆற்றல் அவர்களிடம் உள்ளது.

தற்போது கார்பரேட் நிறுவங்களை அவர்களுக்கான வாய்ப்பை முன்னின்று தருகிறது. அதனைப்போன்று அனைத்து நிறுவங்களும் முன்னின்று வாய்ப்பு வழங்கவேண்டும். அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வர அரசும் தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து பயிற்சிகள் வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories