வைரல்

முஸ்லிமாக வாழ்வது கஷ்டம் : சங்கி அமைப்புகளுக்குப் பயந்து பெயரை மாற்ற முடிவு எடுத்த அரசு அதிகாரி 

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலால் முஸ்லிம் அடையாளத்தில் இருக்கும் தனது பெயரைக் மாற்றிவிடப் போவதாக அரசு அதிகாரி ஒருவர் வேதனையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது நாள் முதலே நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா கும்பல் தலித் மக்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் நடத்தும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. அதிலும் வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள், இந்து வெறியர்கள் என்கிற பெயரில் வலம் வரும் இந்துத்துவா குண்டர்கள், சிறுபான்மை மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பசு மாடுகளை கடத்திச் சென்றதாக பொய்கூறி, பெஹ்லுகான் என்ற இஸ்லாமியரை அடித்துக் கொன்றனர். அத்துடன் கொல்லப்பட்டவர் மீதே வழக்கு தொடரப்பட்டு, அண்மையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டது. இதனை பா.ஜ.க அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

மேலும் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர்களின் அடையாளங்களைக் கண்டும், பெயர்களை வைத்தும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தடுக்கின்றார்.

இதற்கு, பிரதமர் மோடியோ, அத்திப்பூத்தது போல எப்போதாவது ஒருமுறை, அதுவும் இந்துத்துவா கும்பல் கோவித்துக்கொள்ளாத வண்ணம் கண்டனங்களை லேசாக துவிவருகிறார் என எதிர்க்கட்சியினர் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த நியாஸ் கான். அவர் அரசு அதிகாரியாக மத்திய பிரதேசத்தில் பணியாற்றிவருகிறார். அவர் தனது பெயரை மாற்றிக் கொள்ள விரும்புவதாக ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து தனது அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் ஒருவேளை எனது பெயரை மாற்றிக்கொண்டு புதிய பெயரை வைத்து கொண்டால் வன்முறை கும்பல்களிடமிருந்து அது என்னை காப்பாற்றும் என நினைக்கிறேன். என்னிடம் குர்தா, தொப்பி மற்றும் தாடி போன்ற என் சமூக அடையாளங்கள் இல்லை.

எனவே வன்முறை கும்பல் என்னை சூழ்ந்தால் பொய்யான பெயரை சொல்வதன் மூலம், என்னால் எளிதாக அந்த கும்பல்களிடமிருந்து தப்பிக்க இயலும் என நினைக்கிறேன். இருப்பினும், என் சகோதரர் எங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து தாடி வைத்துள்ளதால் அவர் எப்போதும் ஆபத்தான சூழலிலேயே இருக்கிறார்களே.. என்ன செய்வேன்..?” என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து சிறுபான்மையினர் நடத்து வரும் திரைப்படங்கள் கூட குறைந்த வருமானத்தை பெறுகிறது. எனவே வருமானத்தை பெருக்க உங்கள் பெயரையும் அடையாளங்களையும் மாற்றுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories