வைரல்

கேரள வெள்ளத்தில் மக்களைக் காத்த மீனவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி: பினராயி அசத்தல்!

கேரள வெள்ளத்தின் போது உதவிய மீனவ இளைஞர்கள் 177 பேர் கடலோர காவல்படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவை முதல்வர் பினராயி விஜயன் வழங்கியுள்ளார்.

கேரள வெள்ளத்தில் மக்களைக் காத்த மீனவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி: பினராயி அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரளாவில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது, கேரள மக்களை காப்பாற்ற பெரும் முதலில் களம் இறங்கியவர்கள் மீனவர்கள். தங்கள் உயிரையும், உடமைகளையும், படகுகள் சேதமாவதையும் பற்றி கவலைப்படாமல், மக்கள் மீட்பதில் கடமையுணர்ச்சியுடன் செயல்பட்டனர். அந்த கடமையுணர்ச்சியை யாரும் சொல்லி அவர்களுக்கு வரவில்லை. உதவ வேண்டிய நிர்பந்தமும் இல்லை.

மீனவர் மக்களின் அந்த சேவைக்கு தலைவணங்கி அரசு அவர்களுக்கு பல மரியாதைகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கேரள கடலோரத்தை பாதுகாக்கும் பொறுப்பில் மீன்வர்களை அமர்த்தியுள்ளது கேரள அரசு. இவர்கள் கேரளத்தின் படை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பெருமிதமாக அறிவித்தார். கேரள மக்களும் அவர்களை கொண்டாடி வருகின்றனர்.

கேரள வெள்ளத்தில் தவித்த மக்களை இராணுவமே செல்லமுடியாத இடத்திற்கு, இவர்கள் தங்களின் சிறிய படகுகளை கொண்டு மக்களை மீட்க பிரதிபலன் பாராமல் முன்னுக்கு வந்தனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், சிறிதும் அச்ச உணர்வு இல்லாமல் மக்களை மீட்க விரைந்தார்கள். லச்சக்கணக்கான மக்களுக்களை பாதுகாத்தவர்கள்.

இன்னும் அவர்களின் புகழ் கேரள மன்னனை விட்டு நீங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவர்களின் சேவையை பாராட்டி கேரள அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தனர். "எங்கள் குடும்பங்களை காப்பற்ற ஊதியம் எதற்கு" என நிராகரித்தனர் கேரள மக்கள்.

கேரள வெள்ளத்தில் மக்களைக் காத்த மீனவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி: பினராயி அசத்தல்!

அத்தகைய மீனவ குடும்பங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடலோர காவல்படைக்கு மீனவ இளைஞர்கள் 177 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமன உத்தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் ஜூன் 30ம் தேதி வழங்கினார்.

திருச்சூர் ராமவர்மபுரத்தில் கேரள மாநில காவல்துறை அகாடமியில் கேரள கடலோர காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை நடைபெற்றது. அதனை முதல்வர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சக மனிதர்களை பாதுகாத்த மீனவ தொழிலாளர்களுக்கான வெகுமதியாக இந்த சிறப்பு நியமன உத்தரவு வழங்கப்படுகிறது என்று கூறினார். 200 நபர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டதில் 177 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேரள வெள்ளத்தில் மக்களைக் காத்த மீனவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி: பினராயி அசத்தல்!

மீத முள்ள 23 பேரும் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கடலில் மீட்பு பணிகளுக்கு மட்டுமல்லாமல் கடல் எல்லைகளில் பாதுகாப்பு பணியிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். கடல் ரோந்து பணிகளுக்கான பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5 பெண்கள் உட்பட 177 பேர் கொண்ட அணியினருக்கு பயிற்சியில் தேர்ச்சி பெற்றதற்கு முதல்வர் வாழ்த்து கூறினார்.

2018 கேரள வெள்ளத்தின் போது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய மீனவர்கள், இப்போது கடலோர காவல் படையில் இருந்து கேரளாவை காப்பார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories