வைரல்

சுற்றுச்சூழல் பிரச்னைகளை அரசியல் ஆக்கினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் - ராகுல் காந்தி

சுற்றுச்சூழல் பிரச்னைகளை அரசியல் ஆக்கும்வரை, அதற்கு முக்கியத்துவம் கிடைக்காது என ராகுல் காந்தி முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுச்சூழல் குறித்து முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், “மனித இனம் செல்வம், அதிகாரம் போன்றவற்றின் மீது கொண்டுள்ள வெறியால், சுற்றுச்சுழலை சிதைத்து, இதற்கு முன் இல்லாத அளவிற்கு சுற்றுச்சூழல் சீர்கேடு நடந்துள்ளது. இந்த மோசமான சுற்றுச்சுழல் சிதைவை சரியாவிட்டால், இனி எப்போதும் சரி செய்ய முடியாது.

கடந்த 100 ஆண்டுகளில் நாம் உண்டாக்கிய பாதிப்பு, இந்த பாதிப்புகளை சரி செய்யமுடியாத அளவிற்கு உள்ளதாக விஞ்ஞான ஆய்வுகள் உணர்த்துகிறது. உலக வெப்பமயமாதல் என்பது கட்டுக்கதை அல்ல, அது உண்மை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிகமானோருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதை ஆளுகின்ற அரசு கவனிக்க மறுக்கிறது. இதனைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய முன்வரவேண்டும். சுற்றுச்சூழல் பிரச்சினையை அரசியல் பிரச்சினை ஆக்கும்வரை, அதற்கு முக்கியத்துவம் கிடைக்காது. ஆகவே, இந்த நாளில் அதைச்செய்ய உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories