வைரல்

தீவிர சிகிச்சையில் கான்ட்ராக்டர் நேசமணி - உலக ட்ரெண்டிங்கில் #Pray_for_Neasamani

தீவிர சிகிச்சையில் கான்ட்ராக்டர் நேசமணி - உலக ட்ரெண்டிங்கில் #Pray_for_Neasamani
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Venkatesh R S
Updated on

”தேவையில்லாத ஆணியை பிடுங்க சொன்னதால், ஆத்திரமடைந்து, சொந்த சித்தப்பாவின் தலையிலேயே சுத்தியலை போட்ட மகனின் கொடூரச் செயல், ஜமீன் பேலசில் அரங்கேரியுள்ளது. சுத்தியல் விழுந்ததில் சுய நினைவிழந்த கான்ட்ராக்டர் நேசமணியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது உடல் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் இருப்பதாகவும், இரண்டு இட்லி சாப்பிட்டதாகவும் நம்பத்தகுந்த சோர்ஸிடம் இருந்து தகவல் வந்துள்ளது. சுத்தியலை போட்ட நேசமணியின் அண்ணன் மகனுக்கும், சதித்திட்டத்தில் உதவிய இரண்டு அப்பரசண்டிகளுக்கும் தக்க பாடம்புகட்ட, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.”

இப்படித்தான் #Pray_for_Neasamani என்ற ஹாஷ்டேக்கில், ஃபிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு காமெடி, க்ரைம் திரில்லர் வடிவம் பெற்று வருகிறது. இது அனைத்துக்கும் காரணம், காமெடியை சீரியஸாக பேசிக் கொண்ட ஒரு conversation. அதை கீழுள்ள படத்தில் காணலாம்.

தீவிர சிகிச்சையில் கான்ட்ராக்டர் நேசமணி - உலக ட்ரெண்டிங்கில் #Pray_for_Neasamani

இப்போது #Pray_for_Neasamani என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் இந்தியா ட்ரெண்டில் உள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் பதியப்படும் ஒவ்வொரு ட்வீட்டும் குபீர் சிரிப்பு ரகம்.

”ஒரு மனுசனுக்காக இத்தனை பேர் வேண்டுறாங்களே, அவ்வளவு பெரிய ஆளா இந்த நேசமணி” என எதுக்கு ட்ரெண்டானது என தெரியாமலயே வட இந்தியாவில் இருந்து நேசமணிக்காக சில நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நேசமணியை காப்பாற்றுவோம் நீங்களும் பிரே பண்ணுங்கள்!

banner

Related Stories

Related Stories