வைரல்

இனி தனி ஆப் வேண்டாம் : கூகுள் மூலமே உணவு ஆர்டர் செய்யலாம் ! - ஸ்விக்கு ஆப்பா ?

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய செயலிகளை பயன்படுத்தாமல், கூகுள் தேடுதல் மூலமே ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

இனி தனி ஆப் வேண்டாம் : கூகுள் மூலமே உணவு ஆர்டர் செய்யலாம் ! - ஸ்விக்கு ஆப்பா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உணவுகளை ஆர்டர் செய்ய இன்று பல செயலிகள் உள்ளன. வாடிக்கையாளர்களை எண்ணற்ற செயலிகளை தரவிறக்கம் செய்வதிலிருந்து தவிர்க்கும் பொருட்டு கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. இனி உணவுகளை கூகுள் வழியாகவே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். கூகுள் சர்ச், கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றை பயன்படுத்தி எளிதில் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இதற்காக கூகுள் நிறுவனத்தின் கூகுள் தேடல், கூகுள் மேப் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் செயலிகள் அனைத்திலும் “ஆர்டர் ஆன்லைன்” என்ற புதிய பட்டன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்டர் செய்த உணவுக்கான தொகையை, கூகுள் பே செயலி மூலமாகவும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டோர்டேஷ், போஸ்ட்மேட்ஸ், டெலிவரி.காம், ஸ்லைஸ் மற்றும் சவ்நவ் ஆகிய நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகள் கூகுளில் வழங்கப்படவுள்ளது.

உணவுகளை ஆர்டர் செய்ய இன்று பல செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை டவுன்லோட் செய்து உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும், என்ற நிலையை மாற்றியுள்ளது கூகுள் நிறுவனம். இனி உணவுகளை கூகுள் வழியாகவே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். கூகுள் தேடல், கூகுள் மேப் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றில் இதனை நாம் செய்து கொள்ளலாம். தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories