வைரல்

தொடர் விபத்து எதிரொலி போயிங் ரக விமானத்திற்கு அதிகரிக்கும் தடை 

எத்தியோப்பியாவில் கடந்த 10-ம் தேதி ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர்.

boieng 737 max
google boieng 737 max
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

எத்தியோப்பியாவில் கடந்த 10-ம் தேதி 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள் சிக்கியுள்ளன.

எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனையடுத்து 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது. எத்தியோப்பியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை இயக்க அந்நாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு குறைந்தது '1,000 மணி நேரம்' அனுபவம் வேண்டும், துணை விமானிக்கு '500 மணி நேரம்' அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானத்தை பயன்படுத்தி வருகின்றன. ஆணையத்தின் விதிகளுக்கு உடன்படுவோம் என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இவ்வகை விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. ஆஸ்திரேலியா, தென்கொரியா, மங்கோலியா போன்ற நாடுகளும் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதுபோன்று ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் முன்னெச்சரிக்கையாக இவ்வகை விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளது. சில நாடுகளில் விமானிகளும் இயக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories