Videos

அதானி குழுமத்தை எதிர்த்து ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் போர்க்கொடி!

ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் லீயேன் இனோக், அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்கப் பணியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதானி குழுமத்தை எதிர்த்து ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் போர்க்கொடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அதானி குழுமம் இந்தியாவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம். எரிசக்தி நிறுவனமான அதானி குழுமம் பல தளங்களில் இந்த நிறுவனம் தனது பணியை செய்து வருகிறது. இந்தியாவில் அதானி நிறுவனம் எந்த தொழில் முயற்சிகளில் ஈடுபட்டாலும் அதற்கு பா.ஜ.க அரசு முழு ஆதரவை அளிக்கும்.

அதனால் ஏற்படும் இழப்புகள் குறித்து ஒருபோதும் அதானி குழுமம் கவலைப் படுவதில்லை. மோடியின் ஆட்சியில் அதானி குழுமம் பன்மடங்கு லாபம் சம்பாதித்துள்ளது. அதானி குழுமத்தின் பணிகளால் இந்திய சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது என சூழலியல் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் தனது பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்க திட்டத்துக்கான பணிகளை தொடங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதானி குழுமத்தை எதிர்த்து ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் போர்க்கொடி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கலீலி ஆற்றுப்பள்ளத்தாக்கில் கார்மிகேல் நிலக்கரி சுரங்கம் திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு, கருப்பு கழுத்து குருவி இன பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் லீயேன் இனோக் குவின்ஸ்லாந்து மாகாணத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு அவரை சுற்றுச்சூழல் போராளி ஒருவர் சந்தித்து பேசியுள்ளார்.

அந்த சூழலியல் போராளி, இயற்கைச் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழும் பழங்குடி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நீங்கள் சுரங்கத் தொழிலுக்கு எப்படி அனுமதி கொடுத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி குழுமத்தை எதிர்த்து ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் போர்க்கொடி!

அதற்கு பதில் அளிக்கையில், அதானி குழுமத்திற்கு எனது துறை சார்ந்தவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அது எனது கட்டுப்பாட்டில் இல்லை, அதிகாரம் தன்னையும் மீறியதாக உள்ளது. மேலும் அதானி நிறுவனத்திற்கு எதிராக நானும் சூழலியல் போராளிகளோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதானி குழுமத்தின் நாசகார திட்டத்தை எதிர்த்து தடுக்க முயன்றுள்ளார் சுற்றுச்சூழல் அமைச்சர் லியேன் இனோக். ஆனால் அரசினால் அவர் தோல்வி அடைந்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் லீயேன் இனோக் குவின்ஸ்லாந்து பாராளுமன்றத்தின் முதல் பழங்குடியினப் பெண் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories