
டிட்வா புயல் நேற்று (நவ.30) இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்க்பட்டிருந்தது.
இந்த நிலையில் தாழ்வு மண்டலம் மேலும் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று (டிச.01) மாலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை (டிச.02) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






