தமிழ்நாடு

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : சேலம் அ.தி.மு.க நிர்வாகி கைது!

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த அ.தி.மு.க நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு :  சேலம் அ.தி.மு.க நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சங்கர் என்பவர் வந்துள்ளார்.

அப்போது, சங்கர் அந்த இளம் பெண்ணை வழிமத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், தனக்கு நேர்த கொடுமை குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க நிர்வாகி சங்கரை கைது செய்தனர்.

மேலும் சங்கரிடம் விசாரணை நடத்தியதில் இவர் மீது ற்கனவே அடிதடி உட்பட பல வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories