தமிழ்நாடு

தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!

2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பையின் போது ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள் டெமோ வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன

தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு அரசின் 07.05.2021 முதல் 31.10.2025 வரையிலான சாதனை விபரங்கள் வருமாறு:-

விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 5401 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.175.53 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (Elite)

 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில், இத்திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை

ரூ.25 இலட்சத்தை 30.00 இலட்சமாக உயர்த்தியதோடு இத்திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை மாண்புமிகு அமைச்சர் அவர்களால் 12 லிருந்து 27-ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கு ஊக்குவிப்பு திட்டம் (MIMS)

சர்வதேச அளவில் பதக்கங்களைப் பெறும் நோக்கத்துடன் விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து வளர்க்க, தமிழக அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின்கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் பண உதவி ரூ.10.00 இலட்சத்தில் இருந்து ரூ.12.00 இலட்சமாக உயர்த்தப்பட்டதுடன் இந்த திட்டத்தின் கீழ் 71 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (CDS)

 தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற 20 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

 இந்தத் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.4.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 103 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

பயிற்றுநர்கள் நியமனம்

 மாநில அரசால் 76 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முயற்சியின் வழிவகையில் 3 உயர் செயல்திறன் கொண்ட வெளிநாட்டு பயிற்றுநர்கள், 6 நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் 2 பாரா விளையாட்டு பயிற்றுநர்கள் சர்வதேச அளவிலான பயிற்சி அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு விளையாட்டு வணிக விருது 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது.

 இந்து ஸ்போர்ட் ஸ்டார் ஏசஸ் விருது 2024 ஆம் ஆண்டில் விளையாட்டை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய இந்திய விளையாட்டு விருதுகள் 2024 இல் விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 பெங்களூரில் உள்ள GAFX 2025 இல் நடைபெற்ற GEM விருதுகள்

2025 இல் ‘State Contribution to the Esports Industry’ விருதைப் பெற்று, தமிழ்நாடு Indian esports துறையின் முன்னோடியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய முயற்சியான ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ ‘ஒரு மாநிலத்திற்கான விளையாட்டு மேம்பாட்டிற்கான சிறப்பு அங்கீகாரம்’ பிரிவில் மதிப்புமிக்க இந்திய விளையாட்டு விருதுகள் 2025-ல் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

 2022ஆம் ஆண்டு 3 ஆண்கள் மற்றும் 1 பெண் தேர்வு செய்யப்பட்டு, 2023 ஆம் ஆண்டு 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, 2024ஆம் ஆண்டு 3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மற்றும் 2025ஆம் ஆண்டு 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தலா ரூ.1.00 இலட்சம் ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கலைஞர் விளையட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்

 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற மானிய கோரிக்கையில் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்” கீழ் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 16,798 விளையாட்டு உபகரணங்களின் தொகுப்பு ரூ.85.99 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் மதுரை மாவட்டத்தில் கடந்த 18.02.2024 அன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

புதிய உட்கட்டமைப்பு

 வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் பல்நோக்கு திறந்தவெளி அரங்கம் கட்டும் பணி மற்றும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட ரூ.37.00 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.

 நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் விளையாட்டு விடுதிக் கட்டடம் கூடுதல் பணிகளுக்காக ரூ.67.48 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.

 வேலூர் மாவட்டத்தில் பல்நோக்கு திறந்தவெளி விளையாட்டு வளாகம் அமைத்திட நிதி ரூ.19.24 கோடி மற்றும் கூடுதல் நிதி ரூ.2.79 கோடி வழங்கப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 வேலூர் மாவட்டம், காட்பாடியில் மாணவியர்களுக்கான சிறப்பு நிலை விளையாட்டு மையம் ரூ.69 இலட்சத்தில் அமைக்கப்பட்டது.

 விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு உலகத் திறனாளர்கள் போட்டிகள் நடத்தப்பட்டு அம்மாணக்கர்களுக்கு விடுதிகளில் இடம் ஒதுக்கீடு செய்திட ரூ.25 இலட்சத்தில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.

 தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியில் உள்ள மலைவாழ் இன மக்களிடையே உடற்தகுதி விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் ரூ.25 இலட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 தேனி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ரூ.595 இலட்சம் நிதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 சென்னை கோபாலபுரத்தில் குத்துச்சண்டை அகாடமி அமைப்பதற்கு ரூ.778.80 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதியும் ரூ.500 இலட்சத்திற்கு அரசு நிதியும் மற்றும் மீதத் தொகை ரூ.2,78,80,549/- நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பளுதூக்கும் பயிற்சி மையம் ரூ.50 இலட்சத்தில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டடது.

 கரூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.24.00 இலட்சத்தில் டென்னிஸ் மைதானம் மற்றும் ரூ.61.60 இலட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம் ஆக மொத்தம் ரூ.85.60 இலட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 சேலம் மாவட்டத்தில், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

 தென்காசி மாவட்டத்தில் உள்ள பட்டக்குறிச்சி கிராமத்தில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது மற்றும் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 15 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைப்பதற்கு நிலமாற்றம் செய்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கிராமத்தில், நீர் விளையாட்டு போட்டியில் பயிற்சி பெறுவதற்கு, அதில் சாதனைப் படைப்பதற்கும் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்பட்டு வருகிறது.

 பாரா விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பாரா விளையாட்டு அரங்கங்கள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலும், திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ரூபாய் 1 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வளைகோல்பந்து விளையாட்டு வீரர்களுக்காக முதன்மை நிலை விளையாட்டு மையம் ரூபாய் 7 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தில் விளையாட்டு விடுதி மற்றும் புதிய ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம் ரூபாய் 1 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனுப்பேர்பாளையம் கிராமத்தில் ரூ.7.95 கோடி மதிப்பீட்டில் ஆண்களுக்கான ஒரு நவீன விளையாட்டு விடுதி அமைக்கப்பட்டு வருகிறது.

 சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.7.93 கோடி மதிப்பீட்டில் ஆண்களுக்கான ஒரு நவீன விளையாட்டு விடுதி அமைக்கப்பட்டு வருகிறது.

 கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் தரத்தில் 50மீ x 25 மீ அளவில் நீச்சல் குளம் ரூ.6,27,50,000/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 50மீ x 25 மீ அளவில் டைவிங் வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் ரூ.12,50,00,000/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் ரூபாய் 10 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் ரூபாய் 10 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 சென்னை ஜவர்ஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் கூடிய உயர் செயல்திறன் மாணவர் விடுதி ரூ.24.70 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய்ததின் பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள் மற்றும் வெளி விளையாட்டரங்கங்களில் கட்டமைப்பு வசதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்திடும் வகையில் முதல்கட்டமாக ரூபாய் 2 கோடியே 43 இலட்சத்து 50 ஆயிரம் அரசு நிதி ஒதுக்கீடு பெற்று, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக வளாகத்தில் ரூ.172.56 இலட்சம் மதிப்பீட்டிலும், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு வளாகத்தில் ரூ.20.40 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் வேளச்சேரி ஏஜிபி வளாகத்தில் ரூ.81.61 இலட்சம் மதப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூபாய் 2 கோடியே 74 இலட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் சிறப்பு நிலை விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் வளைகோல்பந்து விளையாட்டரங்கத்தில் மாணவியர்களுக்கான வளைகோல்பந்து பயிற்சிக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி ரூபாய் 52.43 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 சென்னை கோபாலபுரத்தில் அமைந்து குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு விடுதி அமைக்கப்படுகிறது.

 சென்னை நேரு உள்விளையாட்டரங்கம் வளாகத்தில் பிரத்யேக எறிதல் பகுதி ரூ.2,49,05,366/- மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

 சென்னை நேரு உள்விளையாட்டரங்கம் வளாகத்தில் நிழல் பன்முக விளையாட்டு வசதி ரூ.3,49,30,221/- மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு வளாகங்களில் இளம் விளையாட்டு வீரர்களை ஈர்க்கும் புட்சால், பாக்ஸ் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு மைதானங்கள் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

 பாரா விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பாரா விளையாட்டு அரங்கங்கள் திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் ஆக மொத்தம் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

 சேலம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.11.40 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைக்கப்படுகிறது.

 கடலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.14.49 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைக்கப்படுகிறது

 மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.5,60,51,000/- மதிப்பீட்டில் புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படுகிறது.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள் மற்றும் வெளி விளையாட்டரங்கங்களில் கட்டமைப்பு வசதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்திடும் வகையில் இரண்டாவது கட்டமாக ரூபாய் 2 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரம் அரசு நிதி ஒதுக்கீடு பெற்று, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம், வேளச்சேரி ஏஜிபி நீச்சல் குளம் வளாகம், நேரு பூங்கா விளையாட்டு வளாகம் ஆகிய இடங்களில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கம் கிராமத்தில் சர்வதேச தரத்தில் இந்தியாவின் முதல் 6 டிராப் ரேஞ்ச் மற்றும் டிராப் & ஸ்கீட் ஷூட்டிங் அகாடமி கீரப்பாக்கத்தில் நிறுவப்படுகிறது.

 புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்திற்கு ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!

முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்

 தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளில் அமையவிருக்கும் சிறு விளையாட்டரங்கங்களுக்கும் மற்றும் ஏற்கெனவே 29 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்பாட்டில் உள்ள சிறு விளையாட்டாங்கங்களுக்கும் "முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூபாய் 27 கோடியில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்களில் சேப்பாக்கம், கொளத்தூர், சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி, ஆலங்குடி, வாணியம்பாடி, காங்கேயம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 இரண்டாவது கட்டமாக ரூபாய் 66 கோடியில் 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 மூன்றாவது கட்டமாக ரூபாய் 132 கோடியில் 44 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஒலிம்பிக் அகாடமிகள்

 சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் ரூ.3.065 கோடி செலவில் புதிய மூன்று மாடி கட்டிடத்தில் சென்னை ஒலிம்பிக் அகாடமி நிறுவப்பட்டுள்ளது, மேலும், இது விளையாட்டு வீரர்களால் பயன்பாட்டில் உள்ளது.

 திருச்சியில் ஒலிம்பிக் அகாடமியை நிறுவுவதற்கு ரூ.150 கோடி நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. முதல் கட்டமாக திருச்சியில் ஒலிம்பிக் அகாடமியை அமைத்திட ரூ.50.00 கோடி நிதி ஒப்புதலையும் அரசு வழங்கியுள்ளது. இப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

 மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6.00 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டு வருகிறது.

 நீலகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.3.00 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டு வருகிறது.

 மேற்படி ஒலிம்பிக் அகாடமிகள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறவும், பதக்கங்களை வெல்லவும் லட்சியமாகக் கொண்ட உயர்திறன் விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான வசதியாக அமைகிறது. விளையாட்டு வீரர்களை சர்வதேச தரத்திற்கு தயார்படுத்திடவும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லவும் மிகவும் உறுதுணையாக அமையும்.

சர்வதேச கிரிக்கெட் மைதானம், கோயம்புத்தூர்

 கோயம்புத்தூர் மாவட்டம், சிங்கநல்லூர் கிராமத்தில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் விளையாட்டரங்கம் அமைப்பதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட விளையாட்டரங்கம், சென்னை

 சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், செம்மஞ்சேரி கிராமத்தில் 45.39 ஹெக்டேர் நிலத்தில் பிரம்மாண்டமான உலகளாவிய விளையாட்டரங்கம் அமைப்பதற்கு அரசாணை நிலை எண்.124, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நாள் 27.10.2025-ல் ரூ.261 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி 2025-2026-க்கு ரூ.30 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டும், மீதமுள்ள 231 கோடி நிதியானது 2026-2027 ஆம் ஆண்டிற்கு தேவைக்கேற்ப விடுவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு பழுது பார்த்தல் மற்றும் சீரமைப்பு பணிகள்

 கோயம்புத்தூர் மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.50 இலட்சத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மற்றும் கழிவறைகள் சிறப்பு பழுதுபார்க்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.

 கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.20 இலட்சத்தில் கூடைப்பந்து, கையுந்து பந்து ஆடுகளங்களுக்கு கம்பி வலை அமைக்கப்பட்டது மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

 திருவண்ணாமலை மாவட்டம் மாணவியர்கள் விளையாட்டு விடுதி சிறப்பு பழுது பார்க்கும் பணி மேற்கொள்ள ரூ.39.90 இலட்சம் வழங்கப்பட்டது.

 சென்னை முகப்பேர் விளையாட்டு வளாகத்தில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.137 இலட்சம் நிதி வழங்கப்பட்டது.

 புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களுக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்-2023-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடத்துவதற்காக செயற்கை இழை தடகளப்பாதை ரூ.8.64 கோடியில் மறுசீரமைக்கப்பட்டது.

 சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ஜவஹரலால் நேரு உள்விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் வளைகோல்பந்து விளையாட்டரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம் மற்றும் வேளச்சேரி நீச்சல் குளம் ஆகியவற்றின் விளையாட்டு உட்கட்டமைப்புகள் ரூ.25.00 கோடியில் புனரமைக்கப்பட்டன.

 சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ரூ.25.00 கோடியில் புனரமைக்கப்பட்டது.

 ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தற்போதுள்ள MH மின்னொளி விளக்கிற்கு பதிலாக 6 வருட வருடாந்திரப் பராமரிப்புடன் கூடிய DMX கட்டுப்பாட்டு அமைப்பு கொண்ட ஸ்போர்ட்ஸ் LED மின்னொளி விளக்கு ரூ.9.90 கோடி செலவில் அமைக்கப்பட்டன.

 ரூ.9.098 கோடி செலவினல் இராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கத்தில் சென்னை, ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம் மறுசீரமைக்கப்பட்டு புதிய பயிற்சி ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது.

 மதுரையில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள செயற்கை இழை ஓடுதளப்பாதையை ரூ.8.25 கோடியில் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

 புதிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை தரம் உயர்த்துவதற்கும் நிர்வாக அனுமதி ரூ.26,30,39,099/- மற்றும் நிதி ஒப்பளிப்பு ரூ.10,41,83,099/- வழங்கி அரசாணை எண்.20, இளைஞர் நலன் மற்றும் விளையாட்ட மேம்பாட்டுத் துறை, நாள் 03.02.2025-ல் ஆணை வெளியிடப்பட்டது மற்றும் அரசாணை எண்.110, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நாள் 01.09.2025-ல் ரூ.7,94,28,000/- நிதி ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு விடுதிகள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்க்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் ரூபாய் 9.78 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் விளையாட்டரங்கங்கள் ரூ.47.78 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்து புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை-2025 நடத்துவது முன்னிட்டு மதுரை செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து புதுப்பித்திட அரசு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இப்பணிகள் நவம்பர்-2025-க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 கோயம்புத்தூர் மாவட்ட நேரு விளையாட்டு வளாகத்தில் உள்ள பார்வையாளர்கள் கேலரி ரூ.4,89,48,000/-க்கு பழுதுபார்த்து புனரமைக்கப்படும்.

 சென்னை மாவட்டம் அறிஞர் அண்ணா நீச்சல் குளம் ரூ.2,74,66,000/-க்கு புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.

 சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தின் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப்பாதை புதுப்பிக்கப்படுகிறது.

 சென்னை முகப்பேர் விளையாட்டு வளாகம் ரூ.2,97,55,68/- மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படுகிறது.

 சென்னை வேளச்சேரி ஏஜிபி நீச்சல் குளம் ரூ.16.35 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு உலக தரத்திற்கு மேம்படுத்தப்படுகிறது.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 25 முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் பழுதுபார்த்து புனரமைப்பதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

விளையாட்டு அறிவியல் மையங்கள்

 தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் மதுரையில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் (ISSC) அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. விளையாட்டு தொடர்பான விபத்துக்களை தடுப்பது, மறுவாழ்வு அளிப்பது மற்றும் விளையாட்டு வீரர்கள் விரைவில் விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடங்க அவர்களின் அசல் உடல் தகுதியை மீட்டெடுப்பது, போதைப்பொருள் இல்லாத விளையாட்டு மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்கு அமைக்கப்பட்டது.

 நீலகிரியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் மலை மேலிடப் பயிற்சி மையம் (HATC) அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 சென்னை ஒலிம்பிக் அகாடமி கட்டடத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் நவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தமிழக விளையாட்டு வீரர்கள்

 26.07.2024 முதல் 11.08.2024 வரை பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

 தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்வதற்காகவும் பிரான்சில் 26.07.2024 முதல் 11.08.2024 வரை நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் தகுதி பெற்ற ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு ஊக்க தொகையாக ரூ.7.00 லட்சம் வழங்கப்பட்டது

 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பின்வரும் 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.00 கோடி உயரிய ஊக்க தொகை வழங்கப்பட்டது.

1. மனிஷா ராமதாஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் SU5 வெண்கலம்

2. துளசிமதி முருகேசன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் SU5 வெள்ளி

3. நித்யா ஸ்ரீ சிவன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் SH6 வெண்கலம்

4. மாரியப்பன் தங்கவேலு தடகள உயரம் தாண்டுதல் T63 வெண்கலம்

44ஆவது செஸ் ஒலிம்பியாட்

 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.114.39 கோடி வழங்கப்பட்டது..

 இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி (WTA)

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டியினை நடத்துவதற்காக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திற்கு ரூ.5.00 கோடி நிதி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!

"சென்னை ஓபன் WTA 250 சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025"

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து, சென்னை ஓபன் WTA 250 சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025" ஐ சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில், அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை வெற்றிகரமாக நடத்தியது. இப்போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.12.30 கோடி ஒதுக்கீடு செய்தது.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023

 12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023, சென்னையில் நடைபெற்றது. ரூ.2.00 கோடி தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்டது..

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2023

 முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்திட ரூ.50.86 கோடி நிதி வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 3,76,000 மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சென்னையில் 17 இடங்களில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 27,054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024

 முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்திட ரூ.83.37 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 5,29,558 மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் அக்டோபர் 4-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 32,700 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025

 முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்திட ரூ.83.37 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 8,79,783 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மண்டல அளவிலான போட்டிகளில் 23,925 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, சேலம், மற்றும் வேலூர் நகரங்களில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 30,136 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் -2023

 7வது "ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை-2023" போட்டிகள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெற்றது.

 ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு இப்போட்டிகளை நடத்தியது.

 “ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் (ஆடவர்) சென்னை 2023" போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக ரூ. 17.33 கோடி வழங்கப்பட்டது.

சர்வதேச அலை சறுக்குப் போட்டி 2023

 2023-ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான உலக சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2.68 கோடி நிதி வழங்கப்பட்டது.

ஆசிய அலைசறுக்கு போட்டி 2025

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேஷன் ஆகியோர் இணைந்து 2025 ஆகஸ்ட் மாதம் 3 முதல் 13 வரை மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைசறுக்கு சாம்பியன்ஷிப் 2025 - ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. இப்போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.3.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இப்போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த அலைசறுக்கு வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர், மேலும் இந்திய அலைசறுக்கு வீரர்கள் வரலாற்று சாதனைகளைக் கண்டனர்.

HCL சைக்கிளோத்தான் (CYCLOTHON)

 தமிழ்நாடு அரசு மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் இணைந்து இந்திய சைக்கிளிங் ஓட்டுதல் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் மாபெரும் சைக்ளோத்தான் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ECR-இல் 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

அறிஞர் அண்ணா மாராத்தான் போட்டி 2023

 இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்த்திடும் நோக்கில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.38.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாராத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது.

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி 2023

 பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பித்திடும் வகையில் நடத்தப்பட்டு வரும் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளுக்கு வழங்கப்படும் நிதியினை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.38.00 இலட்சமாக உயர்த்தி ரூ. 1 இலட்சம் வீதம் 38 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (TASCON 2023)

 சர்வதேச விளையாட்டு அறிவியல் தொடர்பான கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.25 இலட்சம் நிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (TASCON 2023) சென்னை தாஜ் கோரமண்டலில் 2023ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்-2023

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையமும், சதுரங்க அறக்கட்டளையும் இணைந்து உலகத்தரம் வாய்ந்த சென்னை செஸ் கிரண்ட் மாஸ்டர் 2023 சதுரங்கப் போட்டியை நடத்தினர். இப்போட்டியில் இந்தியா, நார்வே, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 8 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள். இப்போட்டிகள் ரூ.1.77 கோடி செலவில் நடத்தப்பட்டது.

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்-2024

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதிப்புமிக்க சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024 சதுரங்க போட்டியை 05.11.2024 முதல் 11.11.2024 வரை நடத்தியது. இதில் 8 சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. மொத்த பரிசுத் தொகை ரூ.70.00 இலட்சம் ஆகும். மேலும், இப்போட்டிகளை நடத்துவதற்காக ரூ.2.61 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயம் 2024

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு அரசு மற்றும் ரேசிங் புரோமோசன் பிரைவேட் லிட். ஆகியன இணைந்து இந்தியாவின் முதல் நைட் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை 31.08.2024 மற்றும் 01.09.2024 அன்று நடத்தியது. இப் போட்டி நடத்தியதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல் மற்றும் ஒரே நகரமாக சென்னை திகழ்கிறது.

 இப்போட்டியானது சென்னையில் தீவுத் திடலைச் சுற்றி (போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை) வழியாக 3.7 கிமீ சுற்றுப் பாதையில் நடைபெற்றது. இது இந்தியா மற்றும் தெற்காசியாவிலேயே மிக நீளமான சுற்று ஆகும்.

 இப்போட்டிகளை நடத்துவதற்காக ரூ.40.00 கோடி வழங்கப்பட்டது.

தெற்காசிய ஜீனியர் தடகளப் போட்டிகள் 2024

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து தெற்காசிய ஜீனியர் தடகளப் போட்டிகள் 11.11.2024 முதல் 13.11.2024 வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் பூடான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர் / வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 இப்போட்டிகளை நடத்துவதற்காக ரூ.2.36 கோடி வழங்கப்பட்டது.

76ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2024

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு சைக்ளிங் அசோசியேசன் மூலம் 76ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் விளையாட்டுப் போட்டியை நடத்தியது. இப்போட்டியானது 15 முதல் 19 நவம்பர் 2024 வரை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், செங்கல்பட்டில் நடைபெற்றது.

 இப்போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700 வீரர் / வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை நடத்திட ரூ.75.00 லட்சம் வழங்கப்பட்டது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி

 தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்-2021 ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் 18 வயதிற்குட்பட்ட வீரர்கள் வீராங்கனைகளுக்கு நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 288 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு 14 தங்கப்பதக்கம், 14 வெள்ளிப்பதக்கம் மற்றும் 24 வெண்கலப்பதக்கம் ஆக மொத்தம் 52 பதக்கங்கள் பெற்று தேசிய அளவில் 7வது இடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 5வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2022-இல் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில், தமிழ்நாடு 12 தங்கம் 19 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 52 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்தது.

 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.189.94 கோடி செலவில் நடைபெற்றது.

 இப்போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 5,630க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், 1,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 1000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட

27 விளையாட்டுக்கள் இடம் பெற்றன.

 இப்போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி

 மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக ஆண்டுக்கு ரூ.1.00 கோடியை அரசு ஒப்பளித்துள்ளது.

 2022-2023, 2023-2024 ஆம் ஆண்டுகளில் ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

2025 உலக டேபிள் டென்னிஸ் (WTT) ஸ்டார் கண்டெண்டர்

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2025 உலக டேபிள் டென்னிஸ் (WTT) ஸ்டார் கண்டெண்டர் போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த புகழ்பெற்ற போட்டி 2025 மார்ச் 25 முதல் 30 வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியை சிறப்பாக நடத்திட தமிழ்நாடு அரசு ரூ.3.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation)

 அரசுக்கும். பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும். விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதில் தொழில் நுட்ப நிறுவனங்கள் முனைப்புடன் செயற்படவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

 விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும், உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் பல்வேறு செலவினங்களுக்கும் ரூ.26.57 கோடி இதுவரையில் வழங்கப்பட்டது.

திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்

 அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்டறியப்பட்ட பணியிடங்களில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது.

 சர்வதேச/ஒலிம்பிக் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற 116 விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்

 நலிவடைந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3,000/- லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 74 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

விளையாட்டு விடுதி

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கான 27 விளையாட்டு விடுதிகள், 6 முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் மற்றும் கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகளும் இயங்கிவருகின்றன. இதில் 2600 மாணவ / மாணவியர்கள் தங்கி பயிற்சி பெற்றுவருகிறார்கள்.

அறிவியில் மதிப்பீடு

 விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உடற்தகுதி மற்றும் செயல்திறன் அளவீடுகள் பற்றிய அறிவியல் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

 முதற்கட்டமாக சென்னையில் உள்ள விடுதி மாணவர்களின் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

இளைய உலக செஸ் சாம்பியன் விருது

 இளைய உலக செஸ் சாம்பியனான டி. குகேஷ், 2024 ஆம் ஆண்டிற்கான மிக உயர்ந்த விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதைப் பெற்றார்.

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய வீரர்

 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் 21 வரை சீனாவில் நடைபெற்ற ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்ற செல்வன் வி. ஆனந்த் குமாருக்கு அரசாணையின்படி ரூ.180.00 இலட்சம் (ரூபாய் ஒரு கோடியே எண்பது இலட்சம் மட்டும்) நிதி வழங்கப்பட்டது.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது

 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க அர்ஜுனா விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 விளையாட்டு வீரர்களுக்கு (3 பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்) வழங்கப்பட்டது.

 2025 ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் பிப்ரவரி 14 வரை உத்தரகாண்டில் நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு

24 தங்கம் 30 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 6வது மாநிலமாக உருவாகியுள்ளது.

முதலமைச்சர் கோப்பை திறமையான வீரர்களுக்கான பயிற்சி முகாம்

 முதலமைச்சர் கோப்பை 2024 இல் அடையாளம் காணப்பட்ட திறமையாளர்களுக்கான தீவிர பயிற்சி முகாம் 08.02.2025 முதல் 11.02.2025 வரை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் பின்வரும் பிரிவுகளில் நடத்தப்பட்டது.

ஸ்டார் அகாடமி

 அரசாணை (நிலை) எண்.05, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள். 23.01.2025. அரசாணையின்படி, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மே 5, 2025 அன்று காணொளி வாயிலாக STAR அகாடமி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விளையாட்டில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர் பயிற்சி பெற்று பயன்பெற்று வருகிறார்கள். அரசாணையின்படி ஒரு வருடத்திற்கு நிதி ரூ.3,68,60,000/- ஒதுக்கப்பட்டுள்ளது.

SDAT மேசைப் பந்து விளையாட்டிற்கான உயர் செயல்திறன் மையம்

 அரசாணை எண்.53, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, நாள்.23.03.2025. அரசாணையின்படி, மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) மேசைப் பந்து விளையாட்டிற்கான உயர் செயல்திறன் மையம் (High Performance Centre for Table Tennis)” அமைக்கும் திட்டத்திற்காக ரூ.7,82,49,000/- தொகை TANII திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த மேசைப் பந்து விளையாட்டிற்கான உயர் செயல்திறன் மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் மேசைப்பந்து விளையாட்டில் திறமையுடைய விளையாட்டு வீரர்களை வளர்த்து மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகிறது.

 இம்மையத்தின் மூலம் உலகத் தரத்திலான பயிற்சிகளை வழங்கி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் மற்றும் தொடர்களை நடத்துவதற்கான வசதிகள் உள்ளன.

சென்னை ஈ-ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப் 2025

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் “சென்னை ஈ-ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப் 2025” என்ற சர்வதேச போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 7 முதல் 9 வரை சிறப்பாக நடத்தப்பட்டது. இப்போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.4,54,50,270/- (ரூபாய் நான்கு கோடி ஐம்பத்து நான்கு இலட்சத்து ஐம்பது ஆயிரத்து இருநூற்று எழுபது மட்டும்) ஒதுக்கீடு செய்தது. 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பையின் போது ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள் டெமோ வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories