தமிழ்நாடு

மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!

பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து விட்டதால் கண்டும் காணாமல் இருக்கிறாரா?

மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING  கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என DMK IT WING கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து DMK IT WING வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், ”தமிழ்நாட்டில் விரைவாக வளர்ந்து வரும் Top Tier 2 cities என்று அழைக்கப்படும் மதுரை, கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ திட்ட அனுமதி வேண்டி தமிழ்நாடு அரசு DPR-ஐ ஒன்றிய பாஜக அரசிடம் 19.02.2024 அன்று சமர்ப்பித்தது. 20 மாதங்களுக்கு மேலாக அதனைக் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது 20 இலட்சத்திற்கு குறைவாக மக்கள்தொகை உள்ளதாக ஒரு வினோதமானக் காரணத்தை கூறி திட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இவர்கள் கூறும் இதே 20 இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகைக் கொண்ட ஆக்ரா மற்றும் போபால் போன்ற நகரங்களுக்கு மட்டும் விரைவாக அனுமதி வழங்கியது ஏன்?

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவிட்டு பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார். மக்கள் ஒவ்வொரு முறையும் #GoBackModi சொல்வதற்கு காரணத்தைப் பிரதமரே உருவாக்கி விடுகிறார்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டப்பணிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்ததை "டிவி புகழ்" பழனிசாமி அறிந்துக்கொண்டாரா? பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து விட்டதால் கண்டும் காணாமல் இருக்கிறாரா?" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories