தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : குற்றவாளி கருக்கா வினோத்-க்கு 10 ஆண்டு சிறை !

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : குற்றவாளி கருக்கா வினோத்-க்கு 10 ஆண்டு சிறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை, கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இங்கு ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயில் (எண் 1) முன்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத் என்பவனை பிடித்து விசாரித்தார். அப்போது அவரிடம் மேலும் வெடிக்காத நிலையில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் கைபற்றப்பட்டது.

இந்த வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றி விசாரணை நடத்தபட்டு வந்தது. தொடர்ந்து சென்னை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ கருக்காக வினோத்திற்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் சுமார் 680 பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : குற்றவாளி கருக்கா வினோத்-க்கு 10 ஆண்டு சிறை !

சுமார் இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், என்.ஐ.ஏ தரப்பில் வழக்கறிஞர் ஏன். பாஸ்கரன் ஆஜராகி குற்றம் சாற்றப்பட்ட வினோத்தான் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும், உள்நோக்கத்துடன் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

தொடர்ந்து அரசு தரப்பில் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ். மலர்விழி குற்றம் சாட்டப்பட்ட வினோத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை திரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி, கருக்கா வினோத்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

banner

Related Stories

Related Stories