தமிழ்நாடு

”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!

நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தேஜஸ்வி புகழாரம் சூட்டியுள்ளார்.

”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் தலைமையில் இருக்கும் நிதிஷ்குமார் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இந்தியா கூட்டணி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

20 ஆண்டுகளாக வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் தவித்து வரும் பீகார் மக்களை மீட்க குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் முதலமைச்சராக தேஜஸ்வி வருவர் என்றும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. அதேபோல் இது பீகார் மக்களின் கருத்தாகவும் உள்ளது.

இந்நிலையில், பீகாரில் நடந்த நிகழச்சி ஒன்றில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ”முதலீடுகளை ஈர்க்கவென பிகாரின் முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று நான் பார்த்ததில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கவென பல பணிகளை செய்கிறார். முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துகிறார்.

வெற்றிகரமாக முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகிறார். ஆனால் நமது பிகார் முதலமைச்சரோ நிதி அயோக் கூட்டங்களுக்கு கூட செல்வதில்லை. நாட்டிலேயே சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.” என புகழாரம் சூட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories