
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதாக முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுது.
முதற்கட்டமாக கோயம்பேடு -ஆலந்தூர் இடையே இந்த சேவை தொடங்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் -விம்கோநகர் , சென்ட்ரல் -பரங்கிமலை வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகளில், டந்த ஏப்ரல் வரை 39 கோடி முறை மக்கள் பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் மெட்ரோ ரயில் சேவையை பெறும் வசதியாக, இலவச சைக்கிள், வாடகை பைக், ஆட்டோ, இ-சைக்கிள் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகே உள்ள பேருந்து நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்களுக்கு செல்லும் வசதியாக மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 220 மின்சார மினி ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
11 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 6 மீட்டர் நீளம் கொண்ட 220 புதிய மினி ஏசி மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏசி மின்சார பேருந்து இயக்குவதால் பீக் நேரத்தில் கூட்ட நெரிசல் குறையும், பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.






