தமிழ்நாடு

விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!

கரூர் துயர சம்பவத்தில் கணவரை இழந்த பெண், விஜய் அனுப்பிய 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பினார்.

விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் பரப்புரை நிகழ்ச்சியின்போது, நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நடந்து ஒரு மாத காலமாகியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்கூட தெரிவிக்கவில்லை.

விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு, அவரது ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது கூட, கரூர் சென்று மக்களின் துயரத்தில் பங்கேற்பதற்கு பதில்மாறாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை, விஜய் மாமல்லபுரம் வரவழைத்து அவர்களை சந்தித்துள்ளார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜயின் இந்த செயலால் பாதிக்கப்பட்ட பெண், ஆத்திரமடைந்து தவெக தரப்பில் வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். விஜய் பரப்புரையின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த கோடங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி சங்கவி, விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜயை சந்திக்க தான் வர மறுத்ததால், தனக்கு தெரியாமலேயே தனது உறவினர்களை தவெகவினர் சென்னை அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories